வேலைக்கு சென்ற வெற்றி.. ஜெகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கெட்டி மேளம்!
சென்னை: அஞ்சலியின் அண்ணன் ரகுவரன் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் வண்டியை தள்ளியபடி நடந்து வருகிறார். அவனைப்பார்த்த மகேஷ், நீ இங்க இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க, ஆனால், உன் தங்கச்சி அஞ்சலி, உங்க அப்பாவின் ஐடியாவில் நல்லா சம்பாதிக்கிறாள். உனக்கும் உங்க அப்பா ஐடியாவில் பங்கு இருக்கு நீ போய் கேளு என சொல்கிறான். இதையடுத்து, அஞ்சலியின் செட்டுக்கு வரும் ரகுவரன், அப்பாவின் ஐடியாவில் எனக்கும் பங்கு வேண்டும் என சண்டை போடுகிறான்.
மற்றொரு பக்கம் துளசி, நாம இந்த வீட்டுக்கு வந்துவிட்டாலும், நீங்க சொந்தகாலில் நிற்க வேண்டும் என சொல்கிறாள். துளசியின் அறிவுரையை கேட்டு வெற்றி பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் வேலைக்கு செல்ல முடிவு செய்கிறான். வெற்றி டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு 'டை' கட்டிக்கொண்டு வேலைக்கு கிளம்ப ஈஸ்வரமூர்த்தி இதை பார்த்துவிட்டு எங்கடா போற என்று கேட்க, வெற்றி வேலைக்கு செல்வதாக சொல்கிறான். இதைக்கேட்டு கோவப்படும் ஈஸ்வரமர்த்தி, ஏழு தலைமுறைக்கும் சொத்து இருக்கும் போது நீ எதுக்கு வேலைக்கு போகணும் என்று கேள்வி கேட்கிறார்.

கெட்டி மேளம்: அப்போது அங்கு வரும் துளசி, அவர் தன்னுடைய சொந்தக்காலில் நிற்க வேண்டும் என ஆசைப்படுறாரு மாமா அதனால வேலைக்கு போகட்டும் என்று சொல்கிறாள். பிறகு வெற்றி வேலைக்கு செல்கிறார். வீடு வீடாக சென்று கலெக்ஷன் பணத்தை கேட்கிறான். பணத்தை கொடுக்காத அவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தையும் தங்களது குடும்ப கஷ்டத்தையும் சொல்ல வெற்றி பணத்தை வாங்காமல் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வருகிறான்.
சிக்கிய ஜெகன்: மறுபக்கம், லாரி டிரைவர் ஜெகனுக்கு கடன் கொடுத்த பைனான்சியர் ஃபோன் செய்து, கொடுத்த கடனை திருப்பி தரவில்லை என்றால் வீட்டுக்கு வந்துவிடுவேன், உன் மனைவியிடம் எல்லா உண்மையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறார். இதையடுத்து, ஜெகனுக்கு போன் ஒன்று வருகிறது. அரில், ஸ்ரீகாந்தை லாரி ஏற்றி கொல்ல சொன்னீங்க, என்ன வச்சு நீங்க பணக்கார ஆகிட்டீங்க.. ஆனால், என்ன மறந்துட்டீங்க எனக்கு உடனடியா அஞ்சு லட்சம் ரூபாய் பணம் வேணும் இல்லனா வெற்றி குடும்பத்திடம் உண்மையில் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறான்.
பிறகு அந்த நபரை ஜெகன் பணம் தருவதாக வீட்டுக்கு வர சொல்கிறான். அப்போதது, நானே வாங்குன கடனை கொடுக்க முடியாம இருக்கேன்.. இந்த நேரத்துல உனக்கு அஞ்சு லட்சம் பணம் வேணுமா... சாவுடா என கொல்ல முயற்சிக்க அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











