வெற்றி அப்பா கொலைகாரனா? மீனாட்சியால் தியா கேட்ட கேள்வி.. கெட்டி மேளம்!
சென்னை: ஸ்ரீகாந்தை லாரி ஏற்றி கொலை செய்த லாரி டிரைவர் ஜெகனுக்கு போன் செய்து ஸ்ரீகாந்தை லாரி ஏற்றி கொல்ல சொன்னீங்க, என்ன வச்சு நீங்க பணக்கார ஆகிட்டீங்க.. ஆனால், என்ன மறந்துட்டீங்க எனக்கு உடனடியா ஆறு லட்சம் ரூபாய் பணம் வேணும் இல்லனா வெற்றி குடும்பத்திடம் உண்மையில் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறான். இதனால், ஆத்திரம் அடையும் ஜெகன், பணம் தருவதாக வர சொல்லி, நானே வாங்குன கடனை கொடுக்க முடியாம இருக்கேன். இந்த நேரத்துல உனக்கு அஞ்சு லட்சம் பணம் வேணுமா... சாவுடா என கொல்ல முயற்சிக்க அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
இதையடுத்து வெற்றியின் வீட்டில் மீனாட்சி கையில் சம்மன் கிடைக்க அதை எடுத்துக்கொண்டு வெற்றி ரூமுக்கு வருகிறாள். துளசியிடம் சமன் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல தியா இருப்பதால் துளசி இதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் மீனாட்சி ஸ்ரீகாந்த் இறந்தது நீ கூட என்கிட்ட ஆனா இந்த குழந்தை என்ன பண்ணிச்சு? அநியாயமா வெற்றி கொன்னுட்டானே என்று சொல்கிறாள். தியா இதைக் கேட்டு அப்பாவை கொன்னுட்டாங்களா என்று கேட்க மீனாட்சி அம்மா உங்க வெற்றி அப்பா தான் பண்ணது என்று சொல்ல தியா வெற்றி அப்பா கொலை பண்ணாறா? என ஷாக்காக துளசி மீனாட்சியை திட்டி வெளியே துரத்துகிறாள்.

கெட்டி மேளம்: வெற்றி வீட்டுக்கு வர துளசி நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு மீனாட்சி ரூமுக்கு வந்த வெற்றி இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க தானே எச்சரிக்கிறான். பிறகு ரூமுக்கு வந்து தியா காலை தொட்டு மன்னிப்பு கேட்கிறான். நிச்சயமா அந்த காருக்குள்ள நீ, உன் அப்பா, பாட்டி இருப்பாங்கன்னு எனக்கு தெரியாது என்று சொல்கிறான். ஸ்ரீகாந்த் தப்பா ஞாபகம் வராமல் நீங்க என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிறீங்க உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என தியா சொல்கிறாள்.
மீனாட்சி செய்த சூழ்ச்சி: இந்த சமயத்தில் வெற்றியை பார்க்க வேண்டும் என லாரி டிரைவர் வர ஈஸ்வரமூர்த்தி அடிச்சு வெளியே துரத்து என்று சொல்கிறான். ராணி சந்தேகமடைந்து மீனாட்சியிடம் விஷயத்தை சொல்ல மீனாட்சி அந்த லாரி டிரைவரை பிடித்து விசாரிக்க ஒரு கட்டத்தில் அவன் ஸ்ரீகாந்த் கொன்னது வெற்றி இல்லை ஜெகன் தான் என்ற உண்மையை உடைக்கிறான். பிறகு வெற்றிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று சொல்ல மீனாட்சி நான் சொல்லிக் கொள்கிறேன் என டிரைவரை அனுப்பி வைக்கிறாள். அந்த நேரம் பார்த்து, வெற்றி வெளியில் கிளம்ப அந்த டிரைவர் வெற்றியை பின் தொடர்ந்து செல்ல வெற்றி யாரோ பின் தொடர்வது போல் உணர்வு திரும்பிப் பார்க்க அதற்குள் மீனாட்சி டிரைவரின் தலையில் தாக்கி அவனை ஒளித்து வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











