சத்யாவை வெளுத்துவிட்ட மகேஷ்.. லட்சுமி கேட்ட நறுக்கேள்வி.. கெட்டி மேளம்!

சென்னை: மகேஷ் லட்சுமிக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டே இருக்க, அவள் ஃபோனை எடுக்காமல் தவிர்த்துவிடுகிறாள். இதனால், மகேஷ் நேரடியாக கேரேஜூக்கு வர அஞ்சலி சத்யாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மகேஷ் இதை பார்த்து கடுப்பாகி சத்யா சட்டையைப் பிடித்து சண்டையிடுகிறான். உடனே அஞ்சலி, ஏன் அவரை லவ் பண்ணிடுவேனு உங்களுக்கு பயமா என கேள்வி கேட்க மகேஷ் அப்படியெல்லாம் இல்லை அஞ்சலி, இன்னைக்கு உனக்கு செக்கப் போகணும் அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வந்தேன் என்று சொல்கிறான். என்னைய என்னால பாத்துக்க முடியும், உங்க உதவி தேவை இல்லை என சொல்லும் அஞ்சலி சொல்லி விடுகிறாள்.

துளசிக்கு மீனாட்சியால் தான் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பிரச்சைக்காரன் சுந்தரை கடத்தியது இவள் தான் என அனைத்தையும் தெரிந்து கொள்கிறாள். இதனால், துளசி நேரடியாக மீனாட்சியிம் எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீ தான் என்று கூடிய விரைவில் நிரூபிக்கிறேன் என்று சவால் விடுகிறாள் இதையடுத்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி, மகேஷ் திட்டி அங்கிருந்து துரத்தி விட சத்யா சுப்பிரமணியிடம் எதுக்கு ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க என்று கேட்க அவர் நடந்த விஷயங்களை சொல்கிறார். இதைக்கேட்ட சத்யா இந்த மாதிரி சைக்கோ கூடலாம் யார் வாழ முடியும் என சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த மகேஷ் தன்னைப் பற்றி பேசியதை கேட்டு அவனை அடி வெளுக்கிறான். இதனைத்தொடர்ந்து, அடுத்த நாள் சத்யா கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை செய்ய அஞ்சலி என்னாச்சு என்று கேட்க என்னென்னமோ சொல்லி சமாளிக்க கண்ணாடியை கழட்டு என்று சொல்ல சத்யாவும் கண்ணாடியை கழட்ட அவனது கண் வீங்கி போயிருப்பதை பார்த்து நடந்ததை விசாரிக்கிறாள்.

திட்டுவாங்கும் சத்யா: அதன் பிறகு சத்யா சரக்கு அடித்து விட்டு சுப்பிரமணியுடன் கலாட்டா செய்து கொண்டிருக்க கையில் இருந்த பாட்டிலை கீழே போட்டு உடைத்து விட வெளியே வந்த லட்சுமி அவனுக்கு அப்பா வயதில் இருக்க.. அவனோடு சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு இருக்க என்று சுப்ரமணியை என திட்டுகிறாள். அஞ்சலியும் சத்யாவை பிடித்து திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X