அஞ்சலி மனதில் இடம்பிடித்த சத்யா.. உறுதுணையாக நிற்கும் வெற்றி.. கெட்டி மேளம்!

சென்னை: மகேஷ் கேரேஜிக்கு வந்து சத்யாவை அடித்துவிட்டு சென்ற நிலையில், இரவு,
சத்யா சரக்கு அடித்து விட்டு சுப்பிரமணியுடன் கலாட்டா செய்து கொண்டிருக்க கையில் இருந்த பாட்டிலை கீழே போட்டு உடைத்துவிடுகிறான். சத்தம் கேட்டு வெளியே வந்த லட்சுமி அவனுக்கு அப்பா வயதில் இருக்க.. அவனோடு சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு இருக்க என்று சுப்ரமணியத்தை பார்த்து திட்டுகிறாள். பின் லட்சுமி உள்ளே சென்றுவிட, இருவரையும் திட்டி விட்டு உள்ளே சென்ற பிறகு வெளியே வந்த அஞ்சலி ஏற்கனவே எங்க அம்மா இந்த வேலையை செய்யாதன்னு சொல்லிட்டு இருக்காங்க.. நீங்க வேற ஏன் இப்படி செய்து அவங்கள கோவப்படுறீங்க என சத்யாவை பிடித்து திட்டுகிறாள்.

அடுத்த நாள் அஞ்சலி மற்றும் சத்யா என இருவரும் கேரேஜ்க்கு தேவையான பொருட்களை வாங்க பைக்கில் கிளம்பி செல்கின்றனர். அப்போது ஒரு குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டிருக்க இருவரும் சேர்ந்து சாதுரியமாக செயல்பட்டு குழந்தையை பூட்டப்பட்ட காரில் இருந்து காப்பாற்றுகின்றனர். அங்கு வந்த குழந்தையின் அம்மா இருவருக்கும் நன்றி சொல்லி பணத்தை எடுத்துக் கொடுக்க சத்யா உங்க பொண்ணை நல்லபடியா காப்பாத்திட்டோம். அதுவரைக்கும் போதும். பணத்தை யாராச்சும் இல்லாதவங்களுக்கு கொடுங்க என்று சொல்லி விடுகின்றனர். அதன் பிறகு துளசி மற்றும் வெற்றி என இருவரும் லட்சுமி வீட்டிற்கு வருகின்றனர்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: லட்சுமி சோகமாக இருக்க நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல இருவரும் கேரேஜ்க்கு வருகின்றனர். அஞ்சலியிடம் இந்த வேலை வேண்டாம் என சொல்ல அஞ்சலி யார் என்ன சொன்னாலும் நான் வேலையை விட மாட்டேன் என உறுதியாக இருக்கிறாள். பிறகு சுப்ரமணியிடம் எல்லாம் உங்களால் தான்.. இங்க இருந்து போய்டுங்க என சொல்ல அவர் அஞ்சலியை மீறி என்னால் எதுவும் பண்ண முடியாது. அதுவும் இல்லாமல் சிவராமன் என்னை பார்த்துக்க சொல்லி இருக்கான் என சொல்கிறார். துளசி அப்பா எப்படி இருக்காரு? எப்போ வருவாரு என விசாரிக்க கேஸ் காரணமாக தலைமறைவா இருக்கான். கூடிய சீக்கிரம் வருவான் என சொல்கிறார்.

இதையடுத்து வெற்றி, சத்யா, சுப்ரமணி என ரெண்டு பேரும் பாக்க நல்லவங்களாக தான் இருக்காங்க என சப்போர்ட் செய்து பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X