மகேஷ்க்கு எதிராக அஞ்சலி எடுத்து முடிவு.. பரபரப்பான கதைக்களத்தில் கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியல், கேரேஜில் சத்யாவின் பீர் பாட்டிலை பார்த்த அஞ்சலி அவனிடம் கோபப்படுகிறாள். சத்யா உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா, அம்மாக்கு உன்ன பாத்தாலே புடிக்கல, கேரேசை இழுத்து மூடு இவங்க ரெண்டு பேத்தையும் வெளிய அனுப்பு என சொல்லிக்கிட்டே இருக்காங்க. மறுபக்கம் மகேஷ் கேரேசை மூடுனு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கான். தனி ஆளா ஒரே ஒரு பெண்ணா இந்த கேரேஜ நல்லபடியா கொண்டு வரணும்னு நான் படாதபடு பட்டுக்கிட்டு இருக்கேன். ஆனால், நீ அதை பத்தி எல்லாம் கவலை படாமல் சரக்கு பாட்டிலோட இருக்க. இந்த கேரேஜூக்கு வந்த சனியன் நீ, நீ இங்கிருந்து போனாதான் எல்லாமே உருப்படும் இல்லனா இந்த கேரேஜை இழுத்து மூடுனாலும் பரவால்ல நீ மட்டும் எங்கே வேலையை செய்யக்கூடாது என கடுமையான வார்ததைகளை சொல்லி சத்யாவை திட்ட சத்யா கோபத்தோடு அங்கிருந்து வெளியே சென்று விடுகிறான்.

பின் சுப்பிரமணி, அஞ்சலி சத்யாவை இப்படி திட்டினது தப்புமா. குடிப்பது அவனோட பழக்கம் . நாம பழகுற எல்லார்கிட்டயும் எல்லா நல்ல பழக்கமும் இருக்க வேண்டும் என நினைக்க முடியாது. அது மட்டும் இல்லாம கெட்ட பழக்கம் இருக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்ல, அதேபோல சத்யாவும் கெட்டவன் இல்ல, அவன் ரொம்ப நல்ல பையன் தான். எனக்கு அவன பத்தி ரொம்ப நல்லா தெரியும் அவன் கூட இருக்கணும்னு உங்க அப்பா தான் சொன்னாரு. அதனால தான், நான் அவனை அழைச்சிட்டு வந்தேன்னு என சொல்கிறார். இதை அடுத்து சுப்பிரமணி சத்யாவிற்கு மீண்டும் ஃபோன் செய்து கேரேஜூக்கு வரும்படி அழைக்க சத்யா மீண்டும் கேரேஜுக்கு வருகிறான்.

கெட்டிமேளம் சீரியல் : இதைத்தொடர்ந்து, சத்யா, அஞ்சலி இருவரும் ஒரு கம்பெனிக்கு கார்களை சர்வீஸ் எடுக்க செல்கின்றனர். அப்போது அந்த கார் கம்பெனி ஓனர் சந்தித்து பேச உங்கள மாதிரி சின்ன ஆளுங்களை நம்பியெல்லாம் காரக் கொடுக்க முடியாது என அவமானப்படுத்தி பேசுகிறார். அப்போது ஒரு பெண்மணி இவர்களை பார்த்துவிட்டு தம்பி நீங்களா.. என ஆச்சரியத்துடன் கேட்கிறார். சில தினங்களுக்கு முன்னர் சத்யாவும் அஞ்சலியும் காரில் இருந்து காப்பாற்றிய குழந்தையின் அம்மா தான் என தெரிய வருகிறது. கார் கம்பெனியின் ஓனரின் மனைவியான அவர் இவர்களுக்காக சிபாரிசு செய்து ஆர்டரை வாங்கிக் கொடுக்கிறார்.

Getti melam promo
Photo Credit:
அதன் பிறகு, அஞ்சலி மகேஷை சந்தித்து உன்னை எதிர்த்து நாங்க எடுத்து வைக்கிற முதல் அடி இது. நான் எப்படி வாழ வேண்டும் என எனக்கு நீ சொல்லித்தர தேவையில்லை, என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என எனக்கு நன்றாக தெரியும். நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியா முன்னேறி காட்டுகிறேன். இதில் நிச்சயம் இதில் ஜெயிச்சு காட்டி சிவராமன் பெண்ணு அஞ்சலி என்பதை நிரூபிப்பேன் என சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X