கேரேஜை கொளுத்திய மகேஷ்.. கதறி அழும் அஞ்சலி.. கெட்டிமேளம் சீரியல் !
சென்னை: சத்யா, அஞ்சலி இருவரும் ஒரு கம்பெனிக்கு கார்களை சர்வீஸ் எடுக்க செல்கின்றனர். அப்போது அந்த கார் கம்பெனி ஓனர் சந்தித்து பேச உங்கள மாதிரி சின்ன ஆளுங்களை நம்பியெல்லாம் காரக் கொடுக்க முடியாது என அவமானப்படுத்தி பேசுகிறார். அப்போது ஒரு பெண்மணி இவர்களை பார்த்துவிட்டு தம்பி நீங்களா.. என ஆச்சரியத்துடன் கேட்கிறார். சில தினங்களுக்கு முன்னர் சத்யாவும் அஞ்சலியும் காரில் இருந்து காப்பாற்றிய குழந்தையின் அம்மா தான் என தெரிய வருகிறது. கார் கம்பெனியின் ஓனரின் மனைவியான அவர் இவர்களுக்காக சிபாரிசு செய்து ஆர்டரை வாங்கிக் கொடுக்கிறார்.
பிறகு, அஞ்சலி மகேஷை சந்தித்து உன்னை எதிர்த்து நாங்க எடுத்து வைக்கிற முதல் அடி இது. நான் எப்படி வாழ வேண்டும் என எனக்கு நீ சொல்லித்தர தேவையில்லை, என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என எனக்கு நன்றாக தெரியும். இதில் நிச்சயம் இதில் ஜெயிச்சு காட்டி சிவராமன் பெண்ணு அஞ்சலி என்பதை நிரூபிப்பேன் என சவால் விடுகிறாள்.

கேரேஜை கொளுத்திய மகேஷ்: அஞ்சலி பேசியதால் ஆத்திரத்தில் இருக்கும் மகேஷ், அஞ்சலியின் திமிருக்கு காரணம் அந்த கேரேஜ் தான். இது இருப்பதால் தானே இப்படி அஞ்சலி ஆட்டம் போடுகிறாள். அந்த கேரேஜை இல்லாமல் செய்து விட்டால், எப்படி அவள் பிசினஸ் நடக்கும் என திட்டம் போட்டு மகேஷ், ரௌடிகளிடம் சொல்லி அஞ்சலியின் கேரேஜை கொளுத்த சொல்கிறாள். இதையடுத்து, அனைவரும் தூக்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில் கேரேஜிக்குள் வரும் ரவுடிகள் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அஞ்சலி ஓடி வர, அதற்கு முன்பாக அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விடுகிறது. கேரேஜில் புகை மூட்டத்திற்குள் சிவராமன் சிக்கிக் கொள்ள அவரை சத்யா அவனை பத்திரமாக மீட்கிறாள். சிவராமனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் கஷ்டப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











