மொத்தமும் போச்சே உடைந்த அஞ்சலி.. சத்யா செய்த உதவி.. கெட்டி மேளம்!
சென்னை: அஞ்சலி பேசியதால் ஆத்திரத்தில் இருக்கும் மகேஷ், அஞ்சலியின் திமிரை அடக்க ரௌடிகளிடம் சொல்லி கேரேஜை கொளுத்த சொல்கிறாள். இதையடுத்து, அனைவரும் தூக்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில் கேரேஜிக்குள் வரும் ரவுடிகள் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அஞ்சலி ஓடி வர, அதற்கு முன்பாக அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விடுகிறது. கேரேஜில் புகை மூட்டத்திற்குள் சிவராமன் சிக்கிக் கொள்ள அவரை சத்யா அவனை பத்திரமாக மீட்கிறான்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், அஞ்சலி கேரேஜ் எரிந்து கிடப்பதை பார்த்து மொத்தமாக உடைந்து உட்காருகிறாள். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அப்போது அங்கு வரும் ஹவுஸ் ஓனர் என்னம்மா, நீ வீட்டை வாடகைக்கு எடுத்துட்டு கேரேஜ் நடத்திக்கிட்டு இருக்க. பக்கத்துல வீடு எல்லாம் இருக்கு தீ பிடிச்சு இருந்தா என்ன பண்ணுவது? என வீட்டை உடனே காலி பண்ணுங்க என சொல்கிறார். உடனே, அஞ்சலி சார், நாங்க இந்த வீட்டில் எத்தனை வருஷமா இருக்கோம்,எங்களை பற்றி உங்களுக்கு தெரியாதா, என்னோட நம்பிக்கை இப்படி மொத்தமா எரிஞ்சு போன வேதனையில் இருக்கேன் சார் தயவு செய்து நீங்களும் என்னை வேதனைப்படுத்தாதீங்க என்று சொல்லி கதறி அழுகிறாள்.

கெட்டிமேளம்: அப்போது, கார்ப்பரேஷனில் இருந்து வரும் அதிகாரிகள், கேரேஜ் நடத்துவதற்கு அனுமதி வாங்குனீங்களா.. யாரை கேட்டு இந்த இடத்தில் கேரேஜ் வெச்சீங்க, அதுவும் தீ பிடித்து எரிந்து இருக்கு, இதுக்கு மேல நீங்க இந்த இடத்தில கேரேஜை நடத்த முடியாது என நோட்டீஸ் ஓட்டிவிட்டு செல்கிறார். இதனால், மனம் உடைந்து போன அஞ்சலி என்ன செய்வது என தெரியாமல் கதறி அழுதுக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு காரில் வந்து இறங்கும் மகேஷ். அஞ்சலியை கிண்டலடிக்கும் விதமாக என்ன அஙசலி எல்லாம் கருப்பா இருக்கு... ஓ கூலிங் கிளாஸ் போட்டு இருக்கிறதால இப்படி இருக்கா? என கண்ணாடியை கழட்டி விட்டு பார்க்க, என்ன இப்பவும் கருப்பா இருக்கு.. ஓ எல்லாம் எரிஞ்சி போச்சா, இதுக்கு தான் என் கூட வந்துடுனு சொன்னேன் என நக்கல் செய்கிறான். அஞ்சலி பதிலடி மகேஷூக்கு இதுக்கு மேல நீ இங்கே இருந்த என்ன செய்வேன் என்று தெரியாது என சொல்ல மகேஷ் அங்கிருந்து கிளம்புகிறான்.
இது தேவையா: பிறகு அஞ்சலி வீட்டுக்கு வந்ததும் லட்சுமி இதெல்லாம் உனக்கு தேவையா? எத்தனை முறை உன்னிடம் சொன்னோன் நீ கேட்டியா என திட்டுகிறாள். அஞ்சலி, சிவராமன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருப்பதை பார்த்த சத்யா, இப்படி உடைந்து போனா எப்படி? சொன்ன தேதியில் கார்களை டெலிவரி தர வேண்டா என தனக்கு தெரிந்த நண்பரிடம் அழைத்து வருகிறான். சத்யாவை பார்த்த அந்த நண்பர், அஞ்சலியுடம் சத்யா என்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். இது உங்க கேரேஜ் மாதிரி எடுத்து நடந்துங்க என சொல்கிறார். இதையடுத்து, முருகன், ரேவதி ஆகியோர் அஞ்சலிக்கு ஆதரவாக வேலையை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











