அடுத்தடுத்த சவால்களை எதிர்த்து சாதித்து காட்டிய அஞ்சலி.. பரபரப்பான கதைக்களத்தில்.. கெட்டி மேளம்!

சென்னை: கார் கம்பேனி எரிந்து போன சோகத்தில் அஞ்சலி இருக்க, வீட்டில் லட்சுமி, எத்தனை முறை உன்னிடம் சொன்னோன் நீ கேட்டியா என திட்டுகிறாள். அஞ்சலி, சிவராமன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருப்பதை பார்த்த சத்யா, இப்படி உடைந்து போனா எப்படி? சொன்ன தேதியில் கார்களை டெலிவரி தர வேண்டாமா என தனக்கு தெரிந்த நண்பரிடம் அழைத்து வருகிறான். சத்யாவை பார்த்த அந்த நண்பர், அஞ்சலியிடம் சத்யா என்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். இது உங்க கேரேஜ் மாதிரி எடுத்து நடந்துங்க என சொல்கிறார். இதையடுத்து, முருகன், ரேவதி ஆகியோர் அஞ்சலிக்கு ஆதரவாக வேலையை செய்கின்றனர்.

இன்றைய எபிசோடில் கார் கம்பேனியில் அனைவரும் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கின்றனர். டீ குடிக்க வேண்டும் என வேலை ஆட்கள் கேட்டாலும், சத்யா விடாமல் வேலையை பார்த்துவிட்டு பிறகு போகலாம் என்று சொல்கிறார். இதைப்பார்த்து அஞ்சலி பெருமைப்படுகிறாள். அனைத்து கார்களையும் விறுவிறுப்பாக வேலைகளை செய்து முடிக்க கார் அனைத்தும் டெலிவரி கொடுக்கப்படுகிறது. இதையடுத்து கம்பெனி நிறுவனர் அவர்களை வெகுவாக பாராட்டுகிறார். வேண்டுமென்றுதான் சில பிரச்சனைகளை உருவாக்கி கொடுத்தும் அதை எல்லாம் சரியாக கண்டுபிடித்து நல்லபடியாக வேலையை முடிச்சு கொடுத்திருக்கீங்க என பாராட்டி அவர்களுக்கான பணத்தை கொடுக்கிறார். அதோடு சேர்த்து அடுத்த ஆடரையும் கொடுக்கிறார். இதனால் அஞ்சலி சந்தோஷம் அடைகிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: தொடர்ந்து இங்கே வீட்டு ஓனர், வீட்டுக்கு வந்து லட்சுமியிடம் இதுக்கு மேல நீங்க இங்கே இருக்கக்கூடாது உடனடியாக நீங்க வீட்டை காலி செய்ய வேண்டும் என சொல்கிறார். லட்சுமி அவரிடம் சார், ஏதோ தெரியாமல் தீவிபத்து நடந்து விட்டது. இதுக்கு மேல அப்படி எதுவும் நடக்காது என சொல்லிக்கொண்டு இருக்கிறாள். ஆனால், அவர் அதெல்லாம் முடியாது, உடனடியாக வீட்டை காலி பண்ணுங்க என்று சொல்லி சத்தம் போட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த அஞ்சலி, இந்தாங்க உங்க அஞ்சு மாத வாடகை.. கேரேஜ் தீப்பிடித்து எரிந்ததற்கான நஷ்ட ஈடு என பணத்தை தூக்கி வீச, வீட்டின் ஓனர் இனிமே நீங்க என்ன வேணாலும் நடத்துங்க, வாடகை கேட்டு கூட நான் நேர்ல வரமாட்டேன் அக்கவுண்ட்ல போட்டு விடுங்க யாரும் உங்களை எதுவும் கேட்க மாட்டாங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

மகிழ்ச்சியில் அஞ்சலி: பிறகு அஞ்சலி தன்னிடம் வேலை பார்த்த எல்லோருக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுக்க அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு சிவராமனிடம் இந்தாங்க உங்க ஷேர் என பணத்தை கொடுக்க அவர் என் பொண்டாட்டி புள்ள எல்லாம் ரொம்ப தூரத்தில் இருக்காங்க என் பொண்டாட்டி வேலைக்கு போற அவளை குடும்பத்தை பாத்துக்குவா எனக்கு மூணு வேலை சாப்பாடு போட்டு தங்க இடமும் கொடுத்து இருக்கீங்க.. அதனால எனக்கு பணம் வேண்டாம் என சொல்கிறார். பிறகு சத்யாவிடம் அவனுக்கான ஷேரை கொடுக்க சத்யா என்கிட்ட கொடுக்காதீங்க என் குடும்பத்து கிட்ட கொடுத்துடுங்க என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X