துளசியை கொல்ல முடிவெடுக்கும் மீனாட்சி.. நடந்தது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார் கம்பேனியை தொடங்கி அதில் கிடைத்த லாபத்தில் அஞ்சலி அனைவருக்கும் பணத்தை கொடுக்கிறார். சுப்பிரமணி தனக்கு பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதே போல சத்யாவும் எனக்கு பணம் வேண்டாம் என்று சொல்ல, அஞ்சலி பணத்தை எதுக்கு வேண்டாம் என்று சொல்ற, நீ கஷ்டப்பட்டு செய்த வேலைக்கான பணம் என்று சொல்ல, அப்போது சத்யா, எனக்காக நீங்க ஒரு உதவி செய்ய வேண்டும், இந்த படத்தை எனது குடும்பத்தாரிடம் கொடுக்க என்று சொல்கிறான். அஞ்சலியும் அவ்வளவு தானே நானே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டிமேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி சத்யாவின் குடும்பத்திடம் சென்று பணத்தை கொடுக்க அவர்கள் சத்யா கொடுக்க சொன்னானா? அவ பணம் எங்களுக்கு வேண்டாம் அது பாவப்பட்ட பணம், அந்த பணம் எனக்கு தேவையில்லை என்று சொல்கிறார். மேலும், இனிமேல் அவன் பேரை சொல்லிக்கிட்டு இங்க வர கூட கூடாது என திட்டி அனுப்புகின்றனர். சத்யாவின் குடும்பத்தினர் இப்படி சொன்னதால் அதிர்ச்சி அடையும் அஞ்சலி, சத்யா நல்லவரா தான் இருக்காரு அப்படி இருக்கும்போது அவருடைய குடும்பம் ஏன் இப்படி பேசுறாங்க என்ற குழப்பத்தோடு அங்கிருந்து அஞ்சலி கிளம்பி வருகிறாள். அப்போது வழியில் மகேசை சந்திக்க அஞ்சலி அவனுக்கு ஸ்வீட் கொடுக்க எனக்கு தெரியும் கூடிய சீக்கிரம் நீ என்கூட வந்துருவேனு, வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்கிறான். அப்போது, அஞ்சலி நான் உன் கூட என்னைக்கும் வரமாட்டேன். உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் நடந்தது ஒரு ஆக்சிடென்ட் என பதிலடி கொடுக்கிறாள். நீ கொடுத்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி நான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பேன் என அஞ்சலி பதிலடி கொடுத்து அங்கு இருந்து கிளம்புகிறாள்.

துளசியை கொல்ல நடக்கும் சதி: மறுபக்கம் வீட்டில், துளசி, மீனாட்சியை பார்க்கும் போதெல்லாம் சுந்தர் என்ற பெயரைச் சொல்லி அழைத்து அவளை கடுப்பேத்துகிறாள். இதனால் வெறுப்பாகும் மீனாட்சி, துளசி இப்படியே விட்டுவைக்கக்கூடாது என்னுக்குமே துளசியால் நமக்கு பிரச்சனை தான் என ரௌடிகளை வரவைத்து துளசியை கொல்ல முடிவெடுக்கிறாள். கதிர் தனது அப்பா ஈஸ்வரமூர்த்தியிடம் அம்மா சோசியல் சர்வீஸ் எல்லாம் பண்றதுனால அவங்களுக்கு ஒரு விருது விழா நடத்த முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











