பலியாக போவது யார்? துளசி உயிர் தப்புமா? கெட்டிமேளம் சீரியல்!

சென்னை: கெட்டிமேளம் சீரியல், அபிராமிக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு வரும் கட்சிக்காரர்கள் ஈஸ்வரமூர்த்திக்கு பத்திரிக்கையை கொடுக்கின்றனர். அந்த பத்திரிகையை பார்த்துவிட்டு வருத்தமாக இருக்கிறான். இதை கவனித்த துளசி என்ன வெற்றி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, அம்மாவிற்கு பாராட்டு விழா நடத்துவது உங்களுக்கு பிடிக்கலையா என கேட்கிறாள். அப்படி இல்லை, அம்மாவுக்கு பாராட்டு விழா நடத்துவது பிடிக்காம எல்லாம் இல்ல. ஆனா பத்திரிகைல என் பேரு உங்க பேரு கூட போடல அம்மாவுக்கு என் மேல இன்னும் கோபம் போகல.. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வருத்தப்பட்டு பேசுகிறார்.

இதையடுத்து, துளசி பத்திரிகையை வாங்கி பார்த்துவிட்டு, இரண்டு பேர் பெயரும் இல்லை. இதை இப்படியே விடக்கூடாது. இதுநம்ப உரிமை என சொல்லிவிட்டு, நேராக அபிராமி இடம் சென்று, அத்தை பத்திரிக்கை பாத்தீங்களா, அதில், உங்க சின்ன பையன் பெயர் இஙல்லை, நிச்சயம் நீங்க இப்படி செய்து இருக்க மாட்டீங்க, இருந்தாலும் ஏன் அவர் பெயரை போடவில்லை என்று கேட்கிறாள். உடனே, அபிராமி இதை பார்த்துவிட்டு நேராக கட்சிக்காரர்களிடம், என் சின்ன பையன் பெயரும், என் மருமகள் பெயரையும் ஏன் போடல, இதைபார்ப்பவர்கள் நாங்க என் மகனை ஒதுக்கிவித்துவிட்டதாக நினைக்க மாட்டார்களா, என திட்டுகிறாள். மேலும், என் மகன் பெயர் இல்லாத இந்த விழாவிற்கு நான் வரவே மாட்டேன் என்று சொல்கிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: உடனே, ஈஸ்வரமூர்த்தி, கதிர் நீ தானே பத்திரிக்கை அடிச்சா தம்பி பெயரை ஏன்போடவில்லை என கேட்கிறார். அப்போது கதிர், மீனாட்சி தான் பத்திரிகை வேலையை பார்த்துக் கொண்டாள், எனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார். உடனே மீனாட்சி, அத்தை அவங்க பெயரை நான் தான் போடவில்லை. உங்களுக்கு நடக்கும் விழாவில், அவங்க பேரை போட்டா கோபப்படுவீங்கன்னு தான், நான் பேரை போடவில்லை என்கிறாள். மற்றபடி ஒன்னும் இல்லை என்று சொல்ல, அது எப்படி நீயா முடிவெடுக்கலாம், இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் யார் உனக்கு கொடுத்தது, பத்திரிகையில் என் மகன் பெயர் இல்லாத விழாவிற்கு நான் வரமாட்டேன் என்று சொல்கிறாள். உடனே கட்சிக்காரர்கள், இன்னும் யாருக்கும் பத்திரிகை கொடுக்கவில்லை, வேறு ஒரு பத்திரிகை அடித்து அதில் தம்பி பெயரை சேர்த்துவிடுகிறோம் என சொல்கின்றனர். இதையடுத்து, மீண்டும் அபிராமி, ஏய் மீனாட்சி இதுக்கு மேல தேவையில்லாத வேலை எல்லாம் செய்யாதே என திட்டுகிறாள்.

மீனாட்சியின் சதி திட்டம்: இதையடுத்து, வீட்டுக் வேலைக்காரி பெண் ராணியிடம், இன்னைக்கு வீட்டில் ஏதாவது ஸ்வீட் செய், எல்லாம் சந்தோஷமா சாப்பிடட்டும் ஏன் என்றால், இதுக்கு மேல அவங்களால் ஸ்வீட் சாப்பிட முடியாது. துளசியை முடித்து கட்ட ஒரு திட்டம் போட்டு இருக்கேன். துப்பாக்கி சுடதெரிந்த நல்ல ரவுடிகளை வரவைத்து, மாமாவிடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்து விழா நடந்து கொண்டு இருக்கும் போதே, கூட்டத்தில் இருந்து துளசியை சுட வேண்டும், இது தான் ஐடியா என சொல்கிறாள். இதைக்கேட்டு வேலைக்கார பெண் ராணி பயப்படுகிறாள். பின் மீனாட்சி ரௌடிகளை சந்தித்து, மாமாவின் துப்பாக்கியை கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X