உயிருக்கு ஆபத்தான நிலையில் அபிராமி.. துளசி எடுத்த முடிவு.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சனிக்கிழமை, மீனாட்சியை துளசியை ஏற்பாடு செய்த ரௌடிகள் பாராட்டுவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து சரியான நேரத்திற்காக காத்து இருக்கின்றனர். அப்போது, துளசி அபிராமிக்கு பரிசை கொடுக்கும் போது, தூரத்தில் ரௌடிகள் துப்பாக்கியோடு இருப்பதை பார்த்த அபிராமி, துளசியை காப்பாற்றி அபிராமி குண்டடி வாங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குண்டடிப்பட்டஅபிராமி மயங்கி விழுந்ததை அடுத்து அனைவரும் அவளை மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்கின்றனர். அபிராமியை பரிசோதனை செய்த மருத்துவர், குண்டு இதயத்திற்கு அருகில் இருப்பதால், அவர் மிகவும் ஆபத்தான நிலையில்,ரொம்ப மோசமான நிலையில் இருக்காங்க, அதிகபடியான ரத்தம் போய்விட்டது. அவங்கள காப்பாற்ற உடனடியாக ரத்தம் வேண்டும் என்று சொல்கின்றனர். அபிராமிக்கு பொருந்தக்கூடிய இரத்தம் எங்கும் கிடைக்காத நிலையில் என்ன செய்வது என தவிக்கின்றனர்.

கெட்டிமேளம் : மறுபக்கம் கோவிலில் துளசி, அத்தை இத்தனை நாளான என்னிடம் சரியாக பேசாமல் இருந்தாங்க, இப்போத்தான் என்னிடம் நல்லா பேசுனாங்க, அதுக்குள்ள அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையான என கதறி அழும் துளசி, அத்தை சரியாக வேண்டும் என தீச்சட்டி ஏந்துவது, ஆணிக்கால் செப்பல் அணிந்து கோவிலை வலம் வருவது, அங்க பிரதர்ஷணம் செய்வது என கடுமையான வேண்டுதல்களை நிறைவேற்றுகிறாள்.
ரவுடிகளிடம் பேசும் மீனாட்சி: அபிராமி ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்து ஈஸ்வரமூர்த்தியை கண்கலங்க மகன்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல மீனாட்சி அந்த ரவுடிக்கு ஃபோன் செய்து, குறி தப்புனாலும் சரியான ஆளத்தான் சுட்டு இருக்க, இந்த குடும்பம் உடைந்து உட்கார்ந்திருக்கிறது அதை பார்க்க சந்தோஷமா இருக்கு என பேசுகிறாள். உனக்கு பேசுன பணம் வந்து சேரும் என்று சொல்லி போனை வைக்கிறாள்.
ரத்தம் கொடுத்த துளசி: இங்கே ரத்த பேங்கில் கூட ரத்தம் கிடைக்கவில்லை என ஹாஸ்பிடல் சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த துளசி எனக்கும் அத்தைக்கும் ஒரே பிளட் குரூப் தான்.. நான் ரத்தம் கொடுக்கிறேன் என சொல்கிறாள். துளசி மிகவும் டயர்டாக இருக்க டாக்டர் உங்களால கொடுக்க முடியுமா என்று கேட்க துளசி என்னால முடியும் என்று சொல்லி ரத்தம் கொடுத்து அபிராமியின் உயிரை காப்பாற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











