துளசியால் உயிர் தப்பிய அபிராமி.. மீனாட்சி மீது வரும் சந்தேகம்.. கெட்டி மேளம்!
சென்னை: மருத்துவமனையில் அபிராமிக்கு தேவைப்படும் ரத்த பேங்கில் கூட கிடைக்கவில்லை என ஹாஸ்பிடல் சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த துளசி எனக்கும் அத்தைக்கும் ஒரே பிளட் குரூப் தான்.. நான் ரத்தம் கொடுக்கிறேன் என சொல்கிறாள். துளசி மிகவும் டயர்டாக இருக்க டாக்டர் உங்களால கொடுக்க முடியுமா என்று கேட்க துளசி என்னால முடியும் என்று சொல்லி ரத்தம் கொடுத்து அபிராமியின் உயிரை காப்பாற்றுகிறாள்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், அபிராமி உயிர்பிழைத்துவிட, டாக்டர் இன்னும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்ல ஈஸ்வரமூர்த்தி அபிராமியை காப்பாற்றியதற்காக கையெடுத்து நன்றி சொல்ல டாக்டர் நன்றிய உங்க மருமகளுக்கு சொல்லுங்க அவங்க தான் சரியான நேரத்தில் ரத்தம் கொடுத்து காப்பாத்தினாங்க என்று சொல்ல அபிராமி துளசியை பார்த்து கண்கலங்கி, ரொம்ப நன்றி துளசி என்கிறார். அப்போது அத்தை என்ன இப்படி செய்றீங்க, என்னை நீங்க மருமகளா பாக்காதீங்க, நானும் உங்க மகள் தான், என் அம்மாவிற்கு ஒன்னு என்றால் நான் எப்படி சும்மா இருப்பேன் என்று சொல்ல, அபிராமி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிறாள்.
கெட்டிமேளம்: அப்போது, வெற்றி உங்கள கொல்ல வந்தவன் யாரு,கொல்வதற்கு என்ன காரணம் என்பதை நான் கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்பேன் என்று சொல்கிறான். அப்போது அபிராமி, என்னை கொல்லவரவில்லை, துளசியை தான் கொல்லத்தான் வந்திருக்காங்க, தூரத்தில் இருந்த ரௌடிகள் துளசியை குறிவைப்பதை பார்த்துவிட்டுத்தான் நான், துளசியை காப்பாற்றினேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, துளசி என்ன காப்பாத்துறதுக்காக நீங்க குண்டடி வாங்குனீங்களா என கண் கலங்குகிறாள்.

மீனாட்சி மீது சந்தேகம்: அபிராமி இப்படி சொன்ன பிறகு தான், என்னை யார் கொல்ல வேண்டும் என நினைப்பா, என்னால பிரச்சனை வரும் என நினைக்கக்கூடியவள் மீனாட்சி தான் என அவள் மீது சந்தேகம் வருகிறது. இதையடுத்து, துளசி, மீனாட்சியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க மீனாட்சி மாமாவுக்கு எதிர்க்கட்சியில் இருக்க எதிரிங்க யாராச்சு இப்படி பண்ணி இருப்பாங்க, எதுக்கெடுத்தாலும் என் மேல சந்தேகப்படாத என்ன கோபப்படுகிறாள். ஆனாலும் துளசிக்கு மீனாட்சி மீது ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
அடுத்துநடக்கப்போவது என்ன: இதைத் தொடர்ந்து துளசி அபிராமிக்கு சாப்பாடு கொடுப்பது மாத்திரை கொடுப்பது என பக்கத்திலிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள இருவருக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் உருவாகிறது. ஈஸ்வரமூர்த்தி போலீசை அழைத்து அபிராமியை கொல்ல முயற்சி பண்ணுது யார் என கண்டுபிடிச்சிங்களா என கேட்டு கோபப்படுகிறார். இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனையாக இருக்கு குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாம் என முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











