கடத்தப்படும் துளசி.. போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கெட்டி மேளம்!
சென்னை: மருத்துவமனையில் இருந்து வந்த அபிராமிக்கு, துளசி சாப்பாடு கொடுப்பது மாத்திரை கொடுப்பது என பக்கத்திலிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள இருவருக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் உருவாகிறது. ஈஸ்வரமூர்த்தி போலீசை அழைத்து அபிராமியை கொல்ல முயற்சி பண்ணுது யார் என கண்டுபிடிச்சிங்களா என கேட்டு கோபப்படுகிறார். இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி வீட்டில் தொடர்ந்து பிரச்சனையாக இருக்கு குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாம் என முடிவெடுக்கிறார்.
கெட்டிமேளம் இன்றைய எபிசோடில், கோவிலில் கடா வெட்டி பூஜை செய்கின்றனர். பிறகு துளசி மற்றும் மீனாட்சி பொங்கல் வைக்க அபிராமி துளசிக்கு எப்படி பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்ல சொல்லி தருகிறாள். மீனாட்சி கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு இன்னுமா பொங்கல் வைக்க தெரியல என திட்டுகிறாள். அடுத்து பொங்கல் வைக்கும் நேரத்தில் துளசியை காணவில்லை என அபிராமி தேடுகிறாள். அப்போது, துளசி மண் சோறு சாப்பிட வெற்றி இதை பார்த்து என்ன பண்றீங்க என பதற அத்தைக்கு குணமாகிட்டா மண் சோறு சாப்பிடுவதாக வேண்டிக்கொண்டேன், நான் வேண்டிக்கொண்டபடி அத்தை நல்லபடியாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள், சாமிக்கு நான் வாங்கு கொடுத்தபடி செய்ய வேண்டும் அதற்காகத்தான் இது என சொல்கிறாள். இதை பார்த்து அபிராமியும் எமொஷனலாகி துளசியை கட்டியணைத்து கொள்கிறாள்.

கடத்தப்படும் துளசி: அதன் பிறகு அங்கு வரும் போலீசார், ஈஸ்வரமூர்த்தியிடம் அபிராமி உடலில் பாய்ந்த குண்டு, உங்கள் துப்பாக்கியில் இருக்கும் குண்டு என தெரியவந்து இருக்கு, இது மட்டும் உறுதியாகிவிட்டால், மனைவி கொலை செய்த முயற்சிக்காக உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதைக்கேட்டு வெற்றி,கதிர் ஆத்திரமடைந்து போலீசிடம் சண்டை போடுகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் துளசி, இதுக்குள் ஏதோ மர்மம் இருக்கு. அதை கண்டுபிடிங்க என சொல்கிறாள். இதையடுத்து, துளசி குளத்து பக்கம் செல்ல மீனாட்சி மயக்க மருந்த அவளது முகத்தில் அடித்து காரில் தூக்கி போட்டு கொலை செய்ய சொல்லி ரௌடிகளை வைத்து கடத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











