கைது செய்யப்பட்ட 'பி.ஏ'.. தெரியவந்த உண்மை.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மீனாட்சி ஏற்பாடு செய்த ஆட்கள் மீனாட்சியை கடத்தி கொல்ல திட்டமிட, அதை தெரிந்து கொண்ட வெற்றி, காரை பின் தொடர்ந்து சென்று துளசியை மீட்டு விடுகிறார். இதையடுத்து, போலீசார், அபிராமியை சுட்ட குண்டும், ஈஸ்வர மூர்த்தியிடம் இருக்கும் துப்பாக்கி குண்டும் ஒன்று தான் என்பது தெரியவர, போலீசார் ஈஸ்வரமூர்த்தியை கைது செய்ய வருகின்றனர். இந்த நேரத்தில் ரவுடியுடன் வெற்றி மற்றும் துளசி இருவரும் வருகின்றனர். இதையடுத்து, ரவுடியிடம் யார் சுட சொன்னது என்று கேட்க, அவன் மீனாட்சி பக்கம் கையை நீட்ட இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அந்த ரவுடி மீனாட்சி பட்டம் கையை நீட்டிய அடுத்த நொடியை அப்படியே ஈஸ்வர மூர்த்தியின் 'பிஏ' பக்கம் கையை நீட்ட போலீஸ் எல்லாத்துக்கும் காரணம் இவன்தான் என கைது செய்கிறது. அதன் பிறகு மீனாட்சி ஸ்டேஷனுக்கு சென்று 'பிஏ'வை சந்திக்கிறாள். சுந்தரோட இந்த நிலைமைக்கு காரணமாக யாரையும் சும்மா விடக்கூடாது என சொல்கிறாள். அந்த 'பிஏ' சுந்தரின் அப்பா என்ற உண்மை தெரிய வருகிறது.

கெட்டிமேளம் சீரியல்: மறுபக்கம் லட்சுமி, சுப்பிரமணி மற்றும் சத்யா அடிக்கடி வீட்டுக்கு வந்து போறது எனக்கு சரியா படல என சொல்லிக் கொண்டிருக்க சத்யா இதை கேட்டுவிட்டு நான் குடிச்சிட்டு என்னமோ பேசி இருப்பேன் அதனால அந்த அம்மா என்னை இப்படி சொல்லுது. நீ என்னமோ பெருசா பண்ணியிருக்க என்று சுப்பிரமணியை கலாய்க்கிறான். அடுத்ததாக மகேஷ் வீட்டுக்கு வந்து அஞ்சலியை செக்கப் அழைத்து செல்வதாக சொல்ல அஞ்சலி அவனுடன் செல்ல மறுக்கிறாள். பிறகு லட்சுமியை சந்திக்கும் மகேஷ் இப்போ அஞ்சலி என் கூட வரலைன்னா திரும்பவும் கோர்ட்டு கேஸ்-னு அலைய விடுவேன் இன்று எச்சரிக்க லட்சுமி போய்ட்டு வந்துட்டு என சொல்கிறாள். மேலும் இவர்களுடன் சத்யாவையும் அனுப்பி வைக்கிறாள். இப்படியான நிலையின் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











