மகேஷ், சத்யா இடையே உருவான மோதல்.. அனல் பறக்கும் கதைக்களம்.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டிமேளம் நேற்றை எபிசோடில், அஞ்சலி,சண்முகம் இருவரும் சத்யாவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில், லட்சுமி, அஞ்சலியை பார்த்ததும் உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா,வயித்துல புள்ளைய வச்சுட்டு இப்படி அலையிறதெல்லாம் தேவையா என கோபப்படுகிறாள். மேலும் சுப்ரமணியையும் பிடித்து திட்ட அப்போது சத்யா பேக்குடன் அந்த வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறான். அனைவரையும் பார்த்த சதியா, என்ன எல்லாம் வெளியில் இருக்குறீங்க, கேரேஜ் எங்கே என்று கேட்க, சத்யாவை பார்த்த லட்சுமி இவன் யார் என்று கேட்கிறாள்.

உடனே அஞ்சலி இவரை பார்ப்பதற்காகத்தான் போய் இருந்தோம். இவர் தான் நம்ம கேரேஜில் வேலை செய்ய போகிறார் என்று சொல்கிறாள். உடனே லட்சுமி, இவனா, இவனை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கான், இவனை நம்பி நீ போறியா, வீட்டிற்கு வந்து இருக்கும் சுப்ரமணி ஒரு உதவாதவன், அந்த உதவாகரையை நம்பி நீ போறியா என்று கேட்டு திட்டுகிறாள். இதையடுத்து,சத்யா கேரேஜில் வேலைக்கு சென்று வேலை செய்ய மகேஷுக்கு இந்த தகவல் தெரிய வருகிறது. உடனே அவன் ரவுடிகளை அனுப்பி சத்யாவை அடித்து துரத்த சொல்கிறான். கேரேஜூக்கு வரும் ரவுடிகள் சத்யாவை தாக்க வர சத்யா ரவுடிகளை அடித்து ஓட விடுகிறான். அடி வாங்கிய ரவுடிகள் மகேஷிடம் விஷயத்தை சொல்ல மகேஷ் நேரடியாக கிளம்பி இங்கு வருகிறான்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம் சீரியல்: மறுபக்கம் துளசி மீனாட்சியை பின் தொடர்ந்து செல்ல மீனாட்சி தனக்கு உதவியாக இருக்கும் அடியாட்களை சந்தித்து பேச அதை வீடியோவாக எடுத்து மீனாட்சியிடம் காட்டி அவங்க யாரு அவங்க கிட்ட எதுக்கு பேசுறீங்க என்று கேட்க மீனாட்சி வழி கேட்டாங்க சொல்லிட்டு இருந்தேன் என சமாளிக்கிறாள். பிறகு ராணியிடம் இந்த துளசி கிட்ட உஷாரா தான் இருக்கணும் போல, எல்லா விஷயத்தையும் அவ மூக்க நுழைச்சிக்கிட்டே இருக்கா, அவள கதற விடுறேன் என சபதம் எடுக்கிறாள்.

வாக்கு வாதம்: மறுபக்கம் மகேஷ் நேரடியாக கேரேஜ்க்கு வந்து சத்யாவை சந்தித்து, நீ இங்கே வேலை செய்யக்கூடாது கிளம்பி போயிடு என சொல்ல, சத்யாவுக்கும் மகேஷுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி அந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிகிறது. பிறகு அங்கு வந்த அஞ்சலி, அவர் ஏன் இங்கு வேலை செய்யக்கூடாது, அவர் வேலை செஞ்சா உனக்கு என்ன? அவர் அழகா இருக்காரு அவர நான் லவ் பண்ணிடுவேன்னு உனக்கு பயமா? என்று கேட்க மகேஷ் அப்படியெல்லாம் இல்ல அஞ்சலி என மழுப்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X