மீனாட்சி பற்றிய ரகசியத்தை அறியும் துளசி.. காத்திருக்கும் அதிரடி திருப்பம்.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில், மகேஷ் நேரடியாக கேரேஜ்க்கு வந்து சத்யாவை சந்தித்து, நீ இங்கே வேலை செய்யக்கூடாது கிளம்பி போயிடு என சொல்ல, சத்யாவுக்கும் மகேஷுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி அந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிகிறது. பிறகு அங்கு வந்த அஞ்சலி, அவர் ஏன் இங்கு வேலை செய்யக்கூடாது, நாங்க முன்னேரவே கூடாதா? அவர் இங்கே தான் இருப்பர் அவரை யாரும் வெளியே அனுப்ப முடியாது என்று சொல்கிறாள். இதைகேட்டு மகேஷ் எதுவுமே பேசமுடியாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார். அதேபோல, மீனாட்சி ரவுடிகளிடம் பேசிக் கொண்டிருப்பதை துளசி பார்த்து விட்டு விசாரித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்றைய எபிசோடில், கோவத்தோடு மீனாட்சி வீட்டுக்கு வந்து ராணியிடம் இந்த துளசி என்னை பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டா.. என்னையே கேள்வி கேட்கிறா, அவளை சாதாரணமா நினைக்க கூடாது. இதுக்கு மேல நான் அவளை என்ன பண்றேன் பாரு என்ன சவால் விடுகிறாள். அதைத்தொடர்ந்து துளசி, மீனாட்சி விஷயத்தில் என்னமோ தப்பா இருக்கு வீட்ல ஒவ்வொரு முறையும் பிரச்சனை நடக்கும் போது அவங்க இங்க இருக்கிறது கிடையாது, ஹாஸ்பிடல் இருந்து சுந்தர் கடத்தப்பட்ட போதும் மீனாட்சி இங்கே இல்லை என அனைத்தையும் வைத்து சந்தேகம் கொள்கிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் மீனாட்சி ஏன் அவங்க அப்பா அம்மா வீட்டுக்கு போக மாட்டுறாங்க, அவங்களும் யாரும் இங்க வர மாட்டாங்க என்று விசாரிக்க கல்யாணம் முடிஞ்ச கையோட ஒரு பிரச்சனை மீனாட்சி அவங்க அப்பா அம்மாவை வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்துட்டா என்று அபிராமி சொல்கிறார். பிறகு துளசி அவங்க சொந்த ஊர் எது என்று விசாரிக்கிறாள். அதன் பிறகு வெற்றியிடம் நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு முடிஞ்சா சாயங்காலம் வரேன், இல்லனா நாளைக்கு காலையில வந்துருவேன் என்று சொல்கிறாள். பிறகு துளசி நேராக மீனாட்சியின் சொந்த ஊருக்கு வருகிறாள். அப்போது அஞ்சலி போன் செய்ய துளசி வெளியில் இருப்பதாக ஊர் பெயரை சொல்ல அந்த ஊர்ல என்னோட பிரண்டு ஒருத்தி இருக்கா என்று அவளைப் பற்றிய தகவல்களை கொடுக்கிறாள்.

மீனாட்சி மீது வரும் சந்தேகம்: பிறகு இருவரும் சேர்ந்து மீனாட்சி மற்றும் சுந்தர் குறித்து விசாரிக்கின்றனர். சுந்தர் வீடு எரிந்து விட்டது அதன் பிறகு அவங்க அப்பா அம்மா எங்க போனாங்கன்னு தெரியல என்று சொல்கின்றனர். மீனாட்சி படித்த காலேஜுக்கு பக்கத்தில் உள்ள கடையில் இருவரது போட்டோவையும் காட்டி விசாரிக்கும் போது ரெண்டு பேரும் அடிக்கடி என் கடைக்கு தான் வருவாங்க என கடைக்காரர் சொல்வதோடு அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்களையும் காட்ட துளசி அதை போட்டோ எடுத்துக் கொள்கிறாள். இங்கே மீனாட்சி துளசி இல்லாததால் சந்தேகம் அடைந்து வெற்றிடம் கேட்க அவ அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருப்பதாக சொல்கிறான். ஆனாலும் மீனாட்சி சந்தேகப்பட்டு அபிராமி வைத்து மசாலா எங்கே வைத்திருக்கிறா என்று கேளுங்கள் என்று சொல்லி துளசிக்கு போன் போட சொல்கிறாள். துளசி போனில் பேசும்போது பின்பக்கத்தில் ரயில் சத்தம் கேட்க துளசி அம்மா வீட்டு பக்கத்துல ரயில்வே ஸ்டேஷன் எதுவும் இல்லையே என சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X