வில்லியாக மாறிய மீனாட்சி.. வெற்றி குடும்பத்தை தீர்த்து கட்ட நடக்கும் சதி.. கெட்டி மேளம்!

சென்னை: மீனாட்சி மீது சந்தேகம் அடையும் துளசி, மீனாட்சியின் சொந்த ஊருக்கு வருகிறாள். அந்த ஊரில் மீனாட்சி குறித்து விசாரிக்கிறாள். மேலும் மீனாட்சியின் கல்லூரியை தெரிந்து கொண்டு, காலேஜுக்கு பக்கத்தில் உள்ள கடையில் மீனாட்சியின் போட்டோவை காட்டி விசாரிக்கும் போது, கடையில் இருப்பவர் அடிக்கடி என் கடைக்கு தான் வருவாங்க என கடைக்காரர் சொல்வதோடு, கல்லூரியில் இருக்கும் போட்டோக்களையும் காட்ட துளசி அதை போட்டோ எடுத்துக் கொள்கிறாள். அதன் பின் சுந்தர் குறித்து விசாரிக்கின்றனர். சுந்தர் வீடு எரிந்து விட்டது அதன் பிறகு அவங்க அப்பா அம்மா எங்க போனாங்கன்னு தெரியல என்று சொல்கின்றனர்.

வீட்டில், துளசி இல்லாததால் சந்தேகம் அடைந்து மீனாட்சி வெற்றிடம் எங்கே என்று கேட்க, அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருப்பதாக சொல்கிறான். ஆனாலும் சந்தேகப்பட்டு மீனாட்சி, அபிராமியிடம் அத்தை துளசிக்கு தான் மசாலா இருக்கும் இடம் தெரியும், அவங்களிடம் கேளுங்க என்று சொல்லி துளசிக்கு போன் போட சொல்கிறாள். துளசி போனில் பேசும்போது பின்பக்கத்தில் ரயில் சத்தம் கேட்க துளசி அம்மா வீட்டு பக்கத்துல ரயில்வே ஸ்டேஷன் இல்லையே, அப்டி என்றால், துளசி எங்கே போனால் என் சந்தேகம் கொள்கிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி துளசிக்கு ஃபோன் செய்து, என்ன அக்கா என் பிரண்ட பாத்தியா? ஏதாவது தெரிந்ததா என்று கேட்க துளசி எல்லா விஷயமும் தெரிந்தது எல்லாத்துக்கும் காரணம் மீனாட்சி தான் என்ற உண்மைகளை உடைக்க அஞ்சலி அதிர்ச்சி அடைகிறாள். அதன் பிறகு கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர் மீனாட்சிக்கு ஃபோன் போட்டு உனக்கு வேண்டப்பட்டவங்க ஒருத்தன் வந்து உன்ன பத்தி விசாரிச்சாங்க என்று சொல்ல மீனாட்சி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா.. என்று கேட்க நாம ஒண்ணா படிச்சது, நீயும் சுந்தரும் ஒண்ணாதான் கடைக்கு வருவீங்க என்று விஷயத்தை சொன்னதாக சொல்கிறார். மேலும் நீயும் சுந்தரும் ஒன்றா இருக்க போட்டோவை காட்டின அதை போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க என்று சொல்ல மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.

வில்லியாக மாறிய மீனாட்சி: துளசி வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாரையும் ஃபார்ம் ஹவுஸ்க்கு அழைத்துச் செல்கிறாள். பிறகு துளசிக்கு ஃபோன் செய்து, என்ன துளசி என்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட போல. ஆனா நீ இந்த விஷயத்தை வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்றதுக்கு அவங்க யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க, எல்லாரையும் ஃபார்ம் ஹவுஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்கேன். இங்க வச்சு மொத்த பேரையும் தீர்த்து கட்ட போறேன் என்று ஷாக் கொடுக்கிறாள்.

மீனாட்சியின் பிளான்: பிறகு ரவுடிகளுக்கு போன் செய்து நைட்டு உள்ளே இறங்கி ஒருத்தரையும் உசுரோட விடாதீங்க என சொல்கிறாள். வெற்றி இங்கே இருந்தால் எல்லாரையும் காப்பாற்றி விடுவான் என்பதால் ரவுடி ஒருவனை கட்சி ஆபீசில் பிரச்சனை என பேசவைத்து வெற்றியை இங்கிருந்து கிளப்புகிறாள். பிறகு ரவுடிகள் வீட்டுக்குள் இறங்கி எல்லோரையும் கொல்லும் முயற்சியில் இறங்க துளசி அங்கு வந்து ரவுடிகளுடன் சண்டை போடுகிறாள். இந்த சண்டைகளுக்கு நடுவில் துளசி ஆதாரங்களை வைத்திருந்த பையை தூக்கி விடுகிறாள் மீனாட்சி. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X