மீனாட்சியிடம் சவால் விட்ட துளசி.. மகேஷை அலறவிட்ட அஞ்சலி.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியரில் சனிக்கிழமை எபிசோடில், மீனாட்சி பற்றிய அனைத்து உண்மைகளும் துளசிக்கு தெரிந்துவிட்டதால், துளசி வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாரையும் ஃபார்ம் ஹவுஸ்க்கு அழைத்துச் செல்கிறாள் மீனாட்சி. பிறகு துளசிக்கு ஃபோன் செய்து, என்ன துளசி என்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட போல. ஆனா நீ இந்த விஷயத்தை வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்றதுக்கு அவங்க யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க, எல்லாரையும் ஃபார்ம் ஹவுஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்கேன். இங்க வச்சு மொத்த பேரையும் தீர்த்து கட்ட போறேன் என்று ஷாக் கொடுக்கிறாள்.
பிறகு ரவுடிகளிடம், நைட்டு உள்ளே இறங்கி ஒருத்தரையும் உசுரோட விடாதீங்க என சொல்கிறாள். வெற்றி இங்கே இருந்தால் எல்லாரையும் காப்பாற்றி விடுவான் என்பதால் ரவுடி ஒருவனை கட்சி ஆபீசில் பிரச்சனை என பேசவைத்து வெற்றியை இங்கிருந்து கிளப்புகிறாள். பிறகு ரவுடிகள் வீட்டுக்குள் இறங்கி எல்லோரையும் கொல்லும் முயற்சியில் இறங்க துளசி அங்கு வந்து ரவுடிகளுடன் சண்டை போடுகிறாள். இந்த சண்டைகளுக்கு நடுவில் துளசி ஆதாரங்களை வைத்திருந்த பையை தூக்கி விடுகிறாள் மீனாட்சி.

கெட்டிமேளம் சீரியல்: இன்றைய எபிசோடில், துளசி ரவுடிகளிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்க, ஈஸ்வரமூர்த்தி துப்பாக்கி எடுத்து இங்கிருந்து போறீங்களா இல்ல சுட்டுத் தள்ளவா என்று மிரட்டியதும் ரௌடிகள் தப்பித்து ஓடுகின்றனர். இதைத்தொடர்ந்து துளசி, மீனாட்சியை சந்தித்து என்கிட்ட இருக்க ஆதாரத்தை எடுக்க தானே நீ இப்படி பண்ண? கூடிய சீக்கிரம் உன்னை பற்றிய உண்மைகளை சொல்லி உன் முகத்திரையை கிழிச்சு நீ யாருன்னு இந்த குடும்பத்தை முன்னாடி நிரூபிக்கிறேன் என சவால் விடுகிறாள்.
சத்யாவுடன் மோதும் மகேஷ்: மறுபக்கம் மகேஷ், அஞ்சலிக்கு ஃபோன் செய்ய அஞ்சலி ஃபோனை எடுக்காமல் விடுகிறாள். பிறகு மகேஷ் லட்சுமிக்கு ஃபோன் செய்ய லட்சுமி அஞ்சலியிடம் விஷயத்தை சொல்ல அவன் அப்படித்தான் ஃபோன் பண்ணி லவ் பண்ற அப்படின்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருப்பான், விடுங்க.. நான் கேரேஜ் கிளம்புறேன், பாத்துக்குறேன் என சொல்கிறாள்.பிறகு கேரேஜ் வந்த அஞ்சலி சத்யாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மகேஷ் இதை பார்த்து கடுப்பாகி சத்யா சட்டையைப் பிடித்து சண்டையிட அஞ்சலி ஏன் அவரை லவ் பண்ணிடுவேனு உங்களுக்கு பயமா என கேள்வி கேட்க மகேஷ் அப்படியெல்லாம் இல்லை அஞ்சலி இன்னைக்கு உனக்கு செக்கப் போகணும் அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வந்தேன் என்று சொல்கிறான்.
என்னைய என்னால பாத்துக்க முடியும், உங்க உதவி தேவை இல்லை என சொல்லும் அஞ்சலி இப்ப நீங்க போறீங்களா இல்ல போலீசுக்கு ஃபோன் பண்ணவா என்று போனை எடுக்க மகேஷ் அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











