வீட்டுக்கு மீனாட்சியின் முன்னாள் காதலன்.. கதிருக்கு வந்த சந்தேகம்.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், மீனாட்சி, சுந்தர் என்ற பைத்தியக்காரனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அவனின் கோலத்தை பார்த்து கதறி அழும் மீனாட்சி,டேய் உனக்கா இந்த நிலைமை என்று பிச்சைக்காரனின் கையை பார்க்க அதில் மீன் வரைந்து இருக்கிறது. அதைப்பார்த்து கதறி அமும் மீனாட்சி, அய்யோ, அந்த மீனு குட்டி நான் தான். என்னாலத்தான் உனக்கு இந்த நிலைமை என அழுகிறாள். அதன் பின், நீ சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு என்று தெரியவில்லை. இரு சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று,அவனுக்கு சாப்பாடு வாங்கிட்டு வருவதற்குள் சுந்தர் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து வெற்றி,துளசி வரும் காரின் குறுக்கே விழுந்து விடுகிறான்.

இதையடுத்து, வெற்றி, அந்த பிச்சைக்காரனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்ற சிகிச்சை அளிக்கின்றனர். பின் அவனிடம் உனக்கு வீடு இருக்கா, தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்க, அவன் பதில் எதுவும் சொல்லாததால் அவனுக்கு யாரும் இல்லை என்பது தெரியவருகிறது. இதனால், அவனை நம்ம வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் என வீட்டிற்கு அழைத்து வர சுந்தரை பார்த்த மீனாட்சி பேரதிர்ச்சி அடைகிறாள். அபிராமி பிச்சைக்காரனை எல்லாம் இதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வரீங்க சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்ப வேண்டியது தானே என்று கோபத்துடன் வெற்றிடம் கேட்க, அம்மா அவனுக்கு யாரும் இல்லை போல, நம்ம கார்ல விழுந்து தான் அவனுக்கு அடிபட்டது. காயம் சரியாகும் வரைக்கும் அவன் வீட்ல இருக்கட்டும் என்கிறான்.

Sree January 19th episode January 19th episode promo 19 19 Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: சுந்தரை பார்த்த மீனாட்சிக்கு பதற்றம் அதிகமாகிறது. மேலும், பிச்சைக்காரன் சுந்தரைப்பார்த்த கதிர் இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்ல மீனாட்சி மேலும் பதறுகிறாள். அதன் பிறகு, துளசி, அபிராமி கோவிலுக்கு செல்ல, பிச்சைக்காரன் சுந்தர் ஓடி வந்து காரில் ஏறி கொள்கிறான். துளசி எவ்வளவு சொல்லியும் கேட்காததால், அவனையும் கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். கோவிலுக்கு வந்த துளசி, சுந்தரிடம் காரிலேயே இரு எங்கேயும் போகக்கூடாது என சொல்விட்டு செல்கிறாள்.

மீனாட்சி சில ரௌடிகளை ஏற்பாடு செய்து, சுந்தரை கடத்த சொல்கிறாள். கோவிலுக்கு வந்த ரௌடி ஒருவன் சுந்தரை பார்த்து தெரிந்தவன் போல பேசி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சி செய்ய, சரியான நேரம் பார்த்து துளசி வந்துவிடுகிறாள். அப்போது அவர்கள், தெரிந்தவர், எங்க கூட அனுப்புங்க என்று சொல்ல, துளசி அனுப்ப மறுக்கிறாள். அபிராமி சொந்தக்காரன் என்று தானே சொல்கிறாள் அனுப்ப வேண்டியது தானே என்று கேட்கிறாள். அப்போது துளசி இல்ல. அத்தை எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு என அனுப்பி வைக்க மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X