அபிராமியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த துளசி.. பதற்றத்தில் மீனாட்சி.. கெட்டிமேளம்!

சென்னை: கெட்டிமேளம் நேற்றைய எபிசோடில், மீனாட்சி சில ரௌடிகளை ஏற்பாடு செய்து, சுந்தரை கடத்த சொல்கிறாள். கோவிலுக்கு வந்த ரௌடி ஒருவன் சுந்தரை பார்த்து தெரிந்தவன் போல பேசி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறான். சரியான நேரம் பார்த்து துளசி கோவில் இருந்து வர, இவரை எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கின்றனர். ஆனால், பிச்சைக்காரன் சுந்தர் அவர்களை பார்த்து பயப்படுகிறான். இதைப்பார்த்த துளசி, நிஜமாகவே இவர் உங்களுக்கு தெரிந்தவரா என்று கேட்க, ஆமாம் மேடம், எங்க கூட அனுப்புங்க என்று சொல்ல, துளசிக்கு சந்தேகம் வர, அவள் அனுப்ப மறுக்கிறாள். உடனே அபிராமி சொந்தக்காரன் என்று தானே சொல்கிறாள் அனுப்ப வேண்டியது தானே என்று கேட்கிறாள். அப்போது துளசி இல்ல. அத்தை எனக்கு ஏதோ இவர்களை பார்த்த சந்தேகமா இருக்கு சொல்லி, அனுப்ப மறுக்கிறாள்.

Getti melam promo
Photo Credit:

துளசி அனுப்பாததால், ஆத்திரமடைந்த ரவுடிகள் சுந்தரை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயற்சி செய்கின்றனர். அப்போது, துளசி தடுக்க இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. துளசி ரவுடியை அடிக்க, ரவுடி அபிராமியை கத்தியால் குத்த வர துளசி சண்டையிட்டு அபிராமியை காப்பாற்றி கையில் கத்தியால் குத்து வாங்குகிறாள். இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு வந்து டாக்டரை சந்திக்கின்றனர். அபிராமிக்கு தன்னை காப்பாற்றிய துளசி மீது கொஞ்சம் அன்பு வர தொடங்குகிறது.

கெட்டிமேளம்: இதுவரை துளசியிடம் பேசாத அபிராமி, ஒன்னும் இல்ல சரியா போயிரும் என்று ஆறுதல் சொல்கிறாள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வெற்றி பதறி, போய் ஹாஸ்பிடல் ஓடி வர அபிராமி அவனிடம் நேரடியாக பேசாமல் கதிர் மூலமாக அவளுக்கு ஒன்னும் இல்ல போய் சாப்பாடு ஊட்டி விட்டு பார்த்துக்க சொல்லு என்று சொல்கிறாள். இதனால் துளசி சந்தோஷமடைகிறாள். அடுத்த நாள் அபிராமி, கிச்சனில் சமைத்து கொண்டிருக்க துளசி உதவுவதாக சொல்ல அபிராமி அதை நிராகரிக்கிறாள். கடைசியில் சமையலை சரியாக செய்யாததால், துளசி, அபிராமியை கலாய்த்து விடுகிறாள்.

பயத்தில் மீனாட்சி: இதையடுத்து, பிச்சைக்காரன் சுந்தர், ஈஸ்வரமூர்த்தியை பார்த்து பயப்பட அபிராமி உங்களை பார்த்து மட்டும் ஏன் பயப்படுறான் என்று கேட்கிறாள்.மீனாட்சி எப்படியாவது சுந்தரை இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X