பிச்சைக்காரனாக வந்து இருக்கும் சுந்தர் யார்? பயத்தில் மீனாட்சி.. நடந்தது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: நேற்றைய எபிசோடில், அபிராமியை துளசி ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றிய நிலையில், அபிராமிக்கு துளசி மீது அன்பு ஏற்படுகிறது. பின் தனது மகன் வெற்றியிடம் துளசி கையில் காயம் இருக்கு, அவளால் சாப்பிட முடியாது, நீயே சாப்பாட்டை ஊட்டிவிடு என்று சொல்கிறாள். இதைக்கேட்ட துளசி மிகவும் சந்தோஷமடைகிறாள். அடுத்த நாள் அபிராமி, கிச்சனில் சமைத்து கொண்டிருக்க துளசி, அத்தை நான் ஏதாவது செய்யட்டுமா என்று கேட்கிறாள்.
ஆனால், அபிராமி, சமையலை நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறாள். கடைசியில் அபிராமி சமையலை சரியாக செய்யாமல், சமையல் தீந்துவிடுகிறது. இதனால், துளசி, அபிராமியை கலாய்த்து விடுகிறாள். அதைத்தொடர்ந்து, பிச்சைக்காரன் சுந்தர், ஈஸ்வரமூர்த்தியை பார்த்து பயப்பட அபிராமி உங்களை பார்த்து மட்டும் ஏன் பயப்படுறான் என்று கேட்கிறாள். மறுபக்கம், மீனாட்சி எப்படியாவது சுந்தரை இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று யோசிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய விமர்சனம்: கெட்டிமேளம் இன்றைய எபிசோடில், சுந்தரை, பார்த்த ஈஸ்வரமூர்த்திக்கு இவனை எங்கேயோ பார்த்தது போல இருக்கே இவனை எங்கே பார்த்தேன் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார். இதனால் சலூன் கடைக்காரரை வரவைத்து சுந்தருக்கு ஹேர் கட் செய்து அடையாளத்தை மாற்ற சொல்கிறார். இதைப்பார்த்து பயப்படும் மீனாட்சி, ஹேர் கட் மட்டும் செய்துவிட்டால், இவன் தான் சுந்தர் என்கிற உண்மை தெரிந்துவிடும் என பயப்படுகிறாள். இவனை எப்படியாவது இந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என ஒரு திட்டத்தை போடும் மீனாட்சி, வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில், சுந்தரை அங்கிருந்து இடமாற்றம் செய்து விடுகிறாள்.
பயத்தில் மீனாட்சி: இதையடுத்து, துளசி வீட்டில் பிச்சைக்காரன் சுந்தரை காணவில்லை என தேடுகிறாள். இந்த விஷயத்தை துளசி வெற்றியிடம் சொல்ல வெற்றியும் வீடு முழுக்க தேடுகிறான். பின் சுந்தர் வீட்டில், எங்கேயாவது போய் இருப்பான் என்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











