சண்முகமாக வீட்டுக்கு வந்த சிவராமன்.. ஏற்க மறுக்கும் லட்சுமி.. கெட்டி மேளம் சீரியல்!
சென்னை: கெட்டிமேளம் சிரியல் நேற்றைய எபிசோடில், சுந்தரை, பார்த்த ஈஸ்வரமூர்த்திக்கு இவனை எங்கேயோ பார்த்தது போல இருக்கே இவனை எங்கே பார்த்தேன் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார். அவன் மீது சந்தேகம் இருந்ததால், சலூனுக்கு அழைத்து சென்று ஹேர் கட் செய்து அழைத்துவரும் படி சொல்ல,கதிர், வெற்றி இருவரும் அவனை கடைக்கு அழைத்து செல்கின்றனர். சுந்தர் யார் என்ற உண்மை தெரிந்துவிடும் என்கிற பயத்தில் இருக்கும், மீனாட்சி, சுந்தரை கடத்தி விடுகிறாள். வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள்.
பிச்சைக்காரனை காணவில்லை என்ற வெற்றி சொல்ல, ஈஸ்வரமூர்த்தி ஒரு பிச்சைக்காரனா கூட பார்த்துக்க முடியாதா? என்று கோபப்படுகிறார். அவன் மேல எனக்கு ஏதோ சந்தேகம் இருந்தது. அவன் யார் என்று பார்ப்பதற்கள் தொலைச்சிட்டு வந்து இருக்கீங்க. சிசிடிவி காட்சிகளை வைத்து அவனை கண்டுபிடிக்க பாருங்க என்று சொல்கிறாள். அந்த நேரம் மீனாட்சி வீட்டில் இல்லாததை கண்டு துளசிக்கு சந்தேகம் வருகிறது. வெளியே இருந்து வந்த மீனாட்சியை பார்த்த ஈஸ்வரமூர்த்தி, நீ எங்கே போன என்று கேட்க, மீனாட்சி கோவிலுக்கு போயிட்டு வந்தேன் என்கிறாள். அதன் பிறகு துளசி, மீனாட்சியை தனியாக சந்தித்து எங்க போயிருந்தீங்க என்று கேட்க, கோவிலுக்கு போனேன் என்கிறாள். கோவிலுக்கு போனீங்க, ஆனால், உங்க நெத்தியில விபூதி குங்குமம் எதுவும் இல்லையே என்று கேள்வி கேட்க உனக்கெல்லாம் பதில் சொல்லணும் என்ற அவசியம் எனக்கில்லை என்று சத்தம் போட்டு விட்டு மீனாட்சி அங்கிருந்து நகர்கிறாள்.

வீட்டிற்கு வந்த சிவராமன்: பிறகு இன்னொரு பக்கம் சிவராமன் குடும்பத்தாரை பார்த்து பேச முடியாமல் வருத்தப்பட அவரது நண்பன், இப்ப நீ யார் என்று யாரும் அடையாளம் தெரியவில்லை. நீ வீட்டுக்கு போயிட்டு சிவராமனின் நண்பன் என்று சொல்லி பேசு, அவங்களுக்கு ஆறுதலாய் இரு என்று சொல்கிறார். இதையடுத்து, சிவராமன் சண்முகம் என்ற பெயரில் தனது குடும்பத்தாரை சந்தித்து உங்க பக்கத்தில் இருந்து உங்கள பார்த்துக்க சொல்லி சிவராமன் அனுப்பியதாக சொல்ல அஞ்சலி உங்களை அப்பா கூட பார்த்ததே இல்லையே என்று சொல்கிறாள். நான் கொஞ்ச நாள் அப்பா கூட வேலை பண்ணினேன் அப்புறம் பெங்களூரு போயிட்டேன் என்று சொல்ல சிவராமன் நண்பரும் ஆமாம் இவர் சொல்வது உண்மை தான் என்று சொல்கிறார்.
நடக்கப்போவது என்ன: அஞ்சலி லட்சுமி இடம் இது குறித்து சொல்ல லட்சுமி எனக்கு அவரைப் பார்த்தால் நம்பிக்கை வரல அவர் இங்கே இருக்க வேண்டாம் அனுப்பிவிடு என்று சொல்ல அஞ்சலி வெளியே வந்து முகத்தில் அடித்தார் போல சொல்ல சண்முகம் அங்கிருந்து வெளியே வருகிறார். பிறகு சிவராமனாகவே அஞ்சலிக்கு போன் செய்து,. நான் உயிரோட தான் இருக்கேன். ஆனால், இப்போதைக்கு வர முடியாத சூழ்நிலையில இருக்கேன் நான்தான் சண்முகத்தை அனுப்பி வச்சேன் அவனை உங்களுக்கு உதவியா வச்சுக்கோங்க என்று சொல்ல லட்சுமி சம்மதம் தெரிவிக்க அஞ்சலி வெளியே சென்று சண்முகத்தை வீட்டிற்குள் அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











