அஞ்சலிக்கு சவால் விடும் மகேஷ்.. அதிரடி என்ட்ரி கொடுக்கப் போகும் சத்யா, யார் அவன்? கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி, லட்சுமியிடம் கார் கேரேஜ் வைப்பது குறித்து பேசுகிறாள். ஆனால், லட்சுமி இதெல்லாம் வேண்டாம். கர்ப்பமாக இருக்கும் போது அந்த வேலையை செய்ய வேண்டாம். நீ இந்த வீட்டில் நிம்மதியா இருந்தால் போதும், மத்த எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். இதையடுத்து, அஞ்சலி, துளசிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல அவளும் வேண்டாம் என்கிறாள். ஆனால், வெற்றி நல்ல முடிவு, கர்ப்பமாக இருக்கும் பெண், இப்படித்தான் யோசிக்க வேண்டும், நீ ஒரு புதுவை பெண் என்று சொல்ல அஞ்சலி கோவப்படுகிறாள்.

தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் அஞ்சலி, கேரேஜை தொடங்குகிறாள். அவளின் முடிவு பிடிக்காமல் வீட்டிலிருந்து யாரும் செல்லாமல் இருக்க முருகன் மற்றும் ரேவதி மட்டும் அஞ்சலிக்கு சப்போர்ட் செய்வதற்காக கடைக்கு செல்கின்றனர். கேரேஜ் ஓபனிங் நடந்து கார்கள் சர்வீஸ் வர அஞ்சலி அதை சரியாக செய்து கொடுக்க அவளை பாராட்டுகின்றனர். அதன் பிறகு அஞ்சலி வீட்டுக்கு வர, லட்சுமி இதெல்லாம் வேண்டாம் என அவளுக்கு எடுத்துச்சொல்ல அஞ்சலி என்ன செய்வது என தெரியாமல் யோசிக்க சுப்பிரமணியமாக அங்கு இருக்கும் சிவராமன், உன்னால எல்லாம் முடியும் உன் கூட நான் இருக்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் என என்கரேஜ் செய்கிறார்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம் :அடுத்த நாள் சர்வீஸ்க்கு கார்கள் அதிகமாக வர இவர்களால் சமாளிக்க முடியாத சூழ்நிலை உருவாக வேலைக்கு ஆள் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்த சமயத்தில் அங்கு வந்த மகேஷ், என் பேச்சை மீறி நீ எல்லா வேலையும் செய்ற, என் மனைவி அஞ்சலி இதெல்லாம் செய்யக்கூடாது என சொல்ல அஞ்சலி அதைக்கேட்க மறுக்கிறாள். இதனால் ரவுடிகளை ஏற்பாடு செய்து, யார் வேலைக்கு வந்தாலும் அடித்துங்க என அந்த தெருவில் அடி ஆட்களை போடுகிறான். அவர்களும் வேலைக்கு வரும் ஆட்களை அடித்து துரத்துகின்றனர். இதை நினைத்து அஞ்சலி வருத்தப்பட, இவனை சமாளிப்பதற்கு அவன் வந்தால் தான் சரியாக இருக்கும் என்று சுப்பிரமணி சொல்கிறான். அஞ்சலி அவன் யார் என்று கேட்க, அவன் பேரு சத்யா என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X