பூமி பூஜையில் மீனாட்சி கொடுத்த ஷாக்.. அனல் பறக்கும் கெட்டி மேளம்!
சென்னை: சுப்ரமணி ஃபோன் செய்து சிவராமன் குரலில் பேச லட்சுமி இதை பார்த்து ஷாக் ஆகிறாள். சுப்ரமணியை பிடித்து நீ எதுக்கு என் புருஷன் மாதிரி அவருடைய குரலில் பேசுற என சத்தம் போடுகிறாள். ஒரு கட்டத்தில் அங்கு வந்த முருகன் அவர் அப்பா தான் என்ற உண்மையை உடைக்க லட்சுமி அதை நம்ப மறுக்க சிவராமன் அவருக்கும் லட்சுமிக்கும் தெரிந்த ஒரு ரகசியத்தை மட்டும் சொல்ல லட்சுமி அதைக் கேட்டு ஷாக் ஆக்கிறாள். சுப்ரமணியாக தங்களுடன் இருப்பது கணவர் சிவராமன் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறாள்.
கெட்டி மேளம்: இதையடுத்து இருவரும் வீட்டுக்கு வர லட்சுமி, சிவராமனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுகிறாள். மறுபக்கம் அஞ்சலி, துளசி இருவரும் சேர்ந்து டாக்குமெண்ட் வாங்கி விடுகின்றனர். அதே நேரம் துளசி அப்பா இல்லாமல் வீடு கட்டுவது எனக்கு என்னமோ தப்பா தெரிகிறது என புலம்புகிறாள். உடனே வெற்றி, இதுல மாமா தப்பா நினைக்க என்ன இருக்கும். மாமா கண்டிப்பா தப்பா எடுத்துக்க மாட்டார் அவரு நீங்க வீடு கட்டுவதை பார்த்து நிச்சயம் சந்தோஷம் தான் படுவார். இது அவரோட கனவுங்க அதை அவரோட பெண்கள் செய்றீங்க அப்படி இருக்கும் போது அது சந்தோஷமான விஷயம் தானே என்கிறார்.

மீனாட்சி மிரட்டல்: அப்போது அங்கு வந்த லட்சுமி என்ன ஆச்சு என்று விசாரிக்க வெற்றி விஷயத்தை சொல்ல உங்க அப்பாவுக்கு இதுல சம்மதம் தான் என்கிறாள். அது எப்படி உனக்கு தெரியும் என்று சொல்ல, நான் அப்பாவை பார்த்து பேசினேன் என்று உளறி விடுகிறாள். பிறகு சுப்பிரமணி அப்பாவிடம் பேசிட்டு சொன்னதாக சொல்லி சமாளிக்கிறாள். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் பூமி பூஜை செய்வதற்கான அனைவரும் கிளம்பி செல்கின்றனர். அங்கு வந்த மீனாட்சி இந்த நிலம் என்னுடைய பெயரில் இருக்கு. அப்படி இருக்கும் போது நீங்க எப்படி வீடு கட்ட முடியும்? போலீசில் புகார் அளிக்க போவதாக அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications