போலிபத்திரம் காட்டிய மீனாட்சிக்கு விழுந்த அறை.. நடுரோட்டில் வைத்து ரவுடிகளை வெளுத்தெடுத்த கருப்பசாமி
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நிலத்திற்கு பூஜை செய்யும் நேரத்தில் மீனாட்சி இது எனக்கு சொந்தமான இடம் என்னுடைய இடத்துல நீங்க எப்படி வீடு கட்டலாம் என பிரச்சனை செய்கிறாள். இது எங்களோட இடம் என துளசி அஞ்சலி ஆகியோர் வாக்குவாதம் செய்ய உங்க அப்பா சிவராமன் இதை எனக்கு எழுதி கொடுத்துட்டாரு என அவர் கையெழுத்து போட்ட பத்திரத்தை காட்டுகிறாள். சுப்ரமணி இது போலியான டாக்குமெண்ட் என்று சொல்ல அதை சிவராமனை நேரில் வந்து சொல்ல சொல்லுங்க என்று மீனாட்சி அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடிக்கிறாள். இதனால் எல்லோரும் மனவேதனையுடன் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.
பிறகு ஈஸ்வரமூர்த்தி சந்தித்த மீனாட்சி அந்த துளசியை பழிவாங்க போறேன் என சிவராமனின் இடத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதிய விஷயத்தை சொல்ல விஸ்வரமூர்த்தி இது ரொம்ப தப்பு. அவர் கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குன இடம் அது என்று திருப்பிக் கொடுக்க சொல்கிறார். மீனாட்சி ஒருநாள் உங்களையே உங்க சக்தி எல்லாத்தையும் பிடுங்கிட்டு நடுரோட்டில் நிக்க வைக்க போறேன் என மைண்ட் வாய்ஸில் பேசுகிறாள்.

கெட்டிமேளம் : இன்றைய எபிசோடில் லட்சுமி கருப்பசாமிக்கு மிளகாய் அரைத்து பூசி நிலத்தை திருப்பி தரும்படி வேண்டுதல் வைக்க வெற்றிக்குள் கருப்பசாமி இறங்குகிறார். மறுபக்கம் ரவுடிகள் நிலத்தை சுற்றி வேலி போட முயற்சி செய்ய பலத்த காற்று வீசி அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. பிறகு கருப்ப சாமியாக வெற்றி அங்கு வந்து நிற்க ரவுடிகள் இவன் ஏதோ வேஷம் போட்டுட்டு வந்து இருக்கான் இவனை அடிச்சு தூக்கி போடுங்கடா என்று சொல்ல ரவுடிகள் வெற்றியை அடிக்க கருப்பசாமி அவர்களை வேட்டையாடுகிறது.
அடிவாங்கிய மீனாட்சி: பிறகு மீனாட்சியை அறைந்து இது என்னுடைய எல்லை. இந்த நிலத்தை அபகரிக்க நினைச்சா சும்மா விடமாட்டேன், ஒழுங்கு மரியாதையா கால்ல விழுந்து பத்திரத்தை அவங்ககிட்ட ஒப்படைச்சிடு என்று மிரட்ட மீனாட்சி பதறி அடித்து ஓடி வந்து லட்சுமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பத்திரத்தை ஒப்படைக்கிறாள். ' அதைத்தொடர்ந்து பூமி பூஜை நடைபெற எல்லோரும் அங்கு ஒன்று கூடுகின்றனர். மீனாட்சி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வெற்றியை பார்த்து அவன் அடித்தது எச்சரித்தது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து பயப்படுகிறாள். பிறகு கணக்குப் பிள்ளையை ஜெயில் சந்தித்து வெற்றி துளசியை ஏதாவது செய்யணும் என்று சொல்ல முதலில் துளசியோட பதவியை பறிக்கணும் என கணக்குப்பிள்ளை ஒரு ஐடியா ஒன்றை கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications