துளசியின் எம்எல்ஏ பதவியைக் காலி செய்ய இன்ஸ்பெக்டர் போட்ட பயங்கர ஸ்கெட்ச்!
சென்னை: இன்றைய எபிசோடில் லட்சுமி கருப்பசாமிக்கு மிளகாய் அரைத்து பூசி நிலத்தை திருப்பி தரும்படி வேண்டுதல் வைக்க வெற்றிக்குள் கருப்பசாமி இறங்குகிறார். மறுபக்கம் ரவுடிகள் நிலத்தை சுற்றி வேலி போட முயற்சி செய்ய பலத்த காற்று வீசி அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. பிறகு கருப்ப சாமியாக வெற்றி அங்கு வந்து நிற்க ரவுடிகள் இவன் ஏதோ வேஷம் போட்டுட்டு வந்து இருக்கான் இவனை அடிச்சு தூக்கி போடுங்கடா என்று சொல்ல ரவுடிகள் வெற்றியை அடிக்க கருப்பசாமி அவர்களை வேட்டையாடுகிறது.
இந்த நிலத்தை அபகரிக்க நினைச்சா சும்மா விடமாட்டேன், ஒழுங்கு மரியாதையா கால்ல விழுந்து பத்திரத்தை அவங்ககிட்ட ஒப்படைச்சிடு என்று மிரட்ட மீனாட்சி பதறி அடித்து ஓடி வந்து லட்சுமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பத்திரத்தை ஒப்படைக்கிறாள். அதைத்தொடர்ந்து பூமி பூஜை நடைபெற எல்லோரும் அங்கு ஒன்று கூடுகின்றனர். மீனாட்சி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வெற்றியை பார்த்து அவன் அடித்தது எச்சரித்தது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து பயப்படுகிறாள். பிறகு கணக்குப் பிள்ளையை ஜெயில் சந்தித்து வெற்றி துளசியை ஏதாவது செய்யணும் என்று சொல்ல முதலில் துளசியோட பதவியை பறிக்கணும் என கணக்குப்பிள்ளை ஒரு ஐடியா ஒன்றை கொடுக்கிறார்.

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில் மீனாட்சி ஒரு இன்ஸ்பெக்டரை சந்தித்து துளசியின் எம்எல்ஏ பதவியை காலி செய்ய வேண்டும் என சொல்கிறாள். உடனே அந்த இன்ஸ்பெக்டர் வெற்றிக்கு ஆட்டோ வாங்கி வாங்கி கொடுத்தது வெற்றி தான். அவருக்கு என் நண்பர் ஏர்போர்ட் போக வேண்டும் என போன் செய்வான், அப்படியே வரும் வழியில் என் பிரண்டு ஒரு பார்சல் தருவான் அதைவாங்கிக்கொண்டு வந்துவிடுங்கள் என சொல்ல சொல்லி இருக்கேன். அப்படி வெற்றி பர்சல் வாங்கிக்கொண்டு வரும் போது இடையில் நான் வழி மறித்து சோதனை செய்வேன். அந்த பார்சலில் போதை பொருள் இருக்கும். இதனால், நான் வெற்றியை கைது செய்துவிடுவேன். மேலும், அந்த ஆட்டோ துளசி பெயரில் இருப்பதால் துளசியையும் கைது செய்துவிடலாம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை சனி,ஞாயிறு கோர்ட் லீவு என்பதால் இரண்டு நாள் போலீஸ் கண்ட்ரோல் தான், இரண்டு பேரையும் என்ன வேணும்னாலும் செய்யலாம் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications