துளசிக்காக நீதிக்காக நேரடியாக களத்தில் இறங்கிய நீதிபதி.. கெட்டி மேளம் !
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கஸ்டமர் இப்படி மாற்றி பொய் சொன்னதால், இதில் ஏதோ பிரச்சனை இருப்பதை புரிந்து கொண்ட வெற்றி, நீங்க ஏதோ திட்டத்தோடு தான் இருக்கீங்க, நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று சொல்கிறார். மேலும் போதைப் பொருள் கடத்தல் கேசில் துளசிக்கும் பங்கு இருக்கலாம் என்று சொல்லி போலீஸ் அவளையும் கைது செய்ய கிளம்புகின்றனர். அத்தனையும் ஏற்பாடு செய்த மீனாட்சி 10 பெண்களை துளசியின் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்துஇருக்கிறாள். துளசியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும்போது அவளை அவமானப்படுத்தி முகத்தில் கறியை பூச வேண்டும் என சொல்கிறாள்.
அதாவது போலீஸ் துளசியை கைது செய்து அழைத்துச் செல்ல மீனாட்சி ஏற்பாடு செய்த ஆட்கள் நீ எல்லாம் ஒரு எம்எல்ஏ வா என்று துளசி முகத்தில் கரியை பூச போக அஞ்சலி இதை தடுத்து நிறுத்துகிறாள். பிறகு போலீஸ் துளசியை கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைக்க வெற்றி அவங்க எந்த தப்பும் பண்ணல என்று சொல்ல போலீஸ் அதை ஏற்க மறுக்கின்றனர்.

கெட்டி மேளம் சீரியல்: இன்றைய எபிசோடில், மறுபக்கம் மீனாட்சி ஈஸ்வரமூர்த்தியிடம் வெற்றி, துளசியை கைது பண்ணிட்டாங்க.. அது பற்றிய செய்தி பரபரப்பாக போயிட்டு இருக்கு என்று சொல்லி டிவியை ஆன் செய்ய அதற்குள் பத்திரிக்கையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க மீனாட்சி அவர்களை அங்கிருந்து பேசி அனுப்பி வைக்கிறாள்.பிறகு அஞ்சலி வக்கீலை அழைத்து வந்து இருவரையும் ஜாமினில் வெளியே எடுக்க முயற்சி செய்ய இது போதைப்பொருள் கேஸ் என்பதால் ஜாமீனில் விட முடியாது என போலீஸ் தடாலடியாக கூறுகின்றனர். இதனால் அஞ்சலி என்ன செய்வது என தெரியாமல் வெளியே வர அந்த பக்கமாக வந்த நீதிபதி என்ன பிரச்சனை என்று கேட்க அஞ்சலி நடந்ததை சொல்ல நீதிபதி போலீஸ் ஸ்டேஷனையே கோர்ட்டாக மாற்றி விசாரணையை தொடங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications