லிஃப்ட்டுக்குள் சிக்கி மயங்கி விழுந்த அஞ்சலி.. ஆபத்தில் முடிந்த மீடிட்டி.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியல் சனிக்கிழமை எபிசோடில், கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறிக்கொண்டு இருக்கும் மகேஷ். தனது மனைவி அஞ்சலியின் மனதில் இடம்பிடிப்பதற்கான சொத்து, கம்பேனி எல்லாத்தையும் விட்டு விட்டு அஞ்சலியின் கம்பேனியில் வேலைக்கு சேர்க்கிறார். இது கொஞ்சம் கூட பிடிக்காத அஞ்சல், சொக்கலிங்கம் சாரிடம் சென்று அவனை இந்த கம்பேனியில் இருந்து தூக்க வேண்டும் என சொல்ல அவர் முடியாதுமா, அவன் திறமையானவன் அவன் இந்த கம்பேனியில் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அஞ்சலியால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடுகிறது.
கெட்டிமேளம்: மறுபக்கம் மகேஷ் இப்போது திருந்தி வருவதால்,வெற்றி மற்றும் துளசி ஆகியோர் அஞ்சலி மற்றும் மகேசை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கின்றனர். அஞ்சலியும் மகேஷும் மீட்டிங்கிற்கு ஒன்றாக சேர்ந்து போகும்படி ஒரு திட்டத்தை போடுகின்றனர். மகேஷ்டன் போக முடியாது என முதலில் அஞ்சலி மறுத்தாலும், முக்கியமான மீட்டிங் என்பதால் மகேசஷூடன் செல்ல சம்மதிக்கிறாள். இருவரும் ஒன்றாக கலந்த ஒரு முக்கியமான டாக்குமெண்ட்டை விட்டுவிட்டதாக சொல்லி அஞ்சலி நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வருகிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் ஆபீஸிற்குள் வருகிறாள். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக லிப்ட்டுக்குள் சிக்கிக் கொள்கிறாள்.

மயங்கிய அஞ்சலி: மறுபக்கம் லட்சுமியின் மகன்கள் டைவிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்ட சுப்ரமணியை பார்த்து யோவ் பெருசு கீழ உக்காந்து சாப்பிட மாட்டியா என கேட்கின்றனர். இதனால் கோபப்பட லட்சுமி கடுப்பாகி சிவராமன் சார் என கூப்பிடு என்று சொல்கிறான். எனது சிவராமனா என கேள்வி எழுப்ப அவருடைய வயசு தானே இவருக்கும் அதனால மரியாதையா பேசுங்க என சமாளிக்கிறாள். இதையடுத்து, வெற்றியும் துளசியும் வீட்டிற்கு வருவதற்கு லேட் ஆகும் என லட்சுமியிடம் போன் செய்து செல்கின்றனர். மறுபக்கம் அஞ்சலி லிஃப்ட்டுக்குள் சிக்கி இருக்க மகேஷ் அவளை தேடி மேலே செல்கிறான். அப்போது அஞ்சலி லிப்டுக்குள் சிக்கி மயங்கி விழுந்து கிடப்பது தெரிகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? மகேஷ் அஞ்சலியை மீட்டெடுப்பானா? என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications