ஆட்டோ எம்எல்ஏ.. வைரலாகும் துளசி.. அஞ்சலிக்கு வந்த சந்தேகம்.. கெட்டி மேளம்!
கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில்,வெற்றி முதல் சவாரியாக துளசியை ஆபீசுக்கு அழைத்து வருகிறார். துளசி எம்எல்ஏ ஆபீஸ் வந்து இறங்கியது அவருக்கு போர்வை போத்தியும் மாலை அணிவித்தும் வரவேற்கின்றனர். எனக்கு இதெல்லாம் வேண்டாம் இனிமே என்ன பார்க்க வருபவர்கள் நோட்டு புத்தகங்களை வாங்கிட்டு வாங்க அது அப்படியே அரசு பள்ளிக்கு அனுப்பி விடுவேன் என சொல்கிறாள். அதைத்தொடர்ந்து, துளசி வெற்றியை சேரில் உக்கார சொல்கிறாள். ஆனால், வெற்றி இந்த சேரில் உக்கார நீங்க தான் சரியான ஆள். படிச்சவங்க கண்டிப்பா மக்களுக்கு நல்லது பண்ணுவீங்க என துளசியை ஊக்கப்படுத்தி உட்கார வைக்கிறான். மேலும் ஆட்டோ சவாரிக்கான பணத்தைக் வெற்றி கேட்க, துளசி நானும் கொடுக்கணும்னு தான் இருந்தேன் என்று சொல்லி பணத்தை எடுத்து கொடுக்கிறாள்.
ஆட்டோ எம்எல்ஏ: அதன் பிறகு மாலை மீண்டும் வெற்றி துளசியை பிக்கப் செய்ய வருகிறான். துளசி ஆட்டோவில் பயணிப்பதை வைத்து ஆட்டோ எம்எல்ஏ என சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக கதிர் இதை ஈஸ்வரமூர்த்தியிடம் சொல்ல இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? நான் அரசியலுக்கு வந்த புதுசுல எவ்வளவு வைரல் ஆகி இருக்கேன், இந்த மக்களுக்கு எவ்வளவு புதுசு புதுசா செய்திருக்கேன் தெரியுமா? நீங்க எல்லாம் கத்துக்குட்டிங்க என சொல்லுகிறார். இங்கே வெற்றி இதுவும் நல்லாதான் இருக்கு உங்களையும் வைத்துள்ள இருக்க நம்ப பாப்பாவையும் பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வராது எனக்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்ல துளசி எப்படி உண்மையை சொல்வது என தெரியாமல் தவிக்கிறாள்.

சத்யாவிற்கு வந்த சந்தேகம்: இங்கே சத்யா கம்பெனி சார்ந்த பைல்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அப்பொழுது சொக்கலிங்கம் மட்டும் இல்லாமல் இன்னொரு இன்வெஸ்ட்டர் இருப்பது தெரிய வருகிறது. இதனால் சத்யா வசுந்தராதேவியிடம் ஏமாந்தது போல இன்னொரு முறை ஏமாறக்கூடாது என அஞ்சலியிடம் விஷயத்தை சொல்ல அஞ்சலி சொக்கலிங்கத்தை சந்தித்து யார் அந்த இன்வெஸ்ட்டர் என கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications