யார் அந்த இன்வெஸ்ட்டர்? சத்யாவிற்கு தெரிந்த உண்மை.. கெட்டி மேளம்!
சென்னை: சத்யா கம்பெனி பைல்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அப்பொழுது சொக்கலிங்கம் மட்டும் இல்லாமல் இன்னொரு இன்வெஸ்ட்டர் இருப்பது தெரிய வருகிறது. இதனால் சத்யா வசுந்தராதேவியிடம் ஏமாந்தது போல இன்னொரு முறை ஏமாந்துவிடக்கூடாது என அஞ்சலியிடம் விஷயத்தை சொல்ல அஞ்சலி சொக்கலிங்கத்தை சந்தித்து யார் அந்த இன்வெஸ்ட்டர் என கேள்வி கேட்கிறாள். அவர் ஏதோ சொல்லி சமாளிக்க, டாக்குமெண்ட்டை கொடுத்து இன்னொரு இன்வெஸ்டர் யாருனு சொல்லுங்க என்கிறாள். ஆனால் சொக்கலிங்கம் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது, நேரம் வரும்போது சொல்கிறேன் என்று சொல்கிறார்.
கெட்டி மேளம்: அதன் பிறகு அஞ்சலி கூடிய சீக்கிரம் யார் அந்த இன்வெஸ்ட்டர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல சத்யா தனது போனை ஆன் செய்து சொக்கலிங்கம் ரூமில் வைத்துவிட்டு வந்துவிடுகிறான். அஞ்சலி,சத்யா வெளியே போனதும், சொக்கலிங்கம் அந்த இன்வெஸ்டருக்கு போன் போட்டு அஞ்சலிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு இப்போ என்ன செய்வது என்று சொல்ல, இந்த விஷயத்தை அங்கே இருந்து பேச வேண்டாம் என சொல்லி, ஒரு இடத்திற்கு கிளம்பி வர சொல்ல சொக்கலிங்கம் கிளம்பி செல்ல சத்யா பின் தொடர்கிறான்.

சத்யாவிற்கு உண்மை தெரிந்தது: ஓரிடத்தில் சொக்கலிங்கம் காத்திருக்க அங்கு வசுந்தராதேவி வர சத்யா அதிர்ச்சி அடைகிறான். கொஞ்ச நேரத்தில் மகேஷிம் அங்கு வர சத்யா மேலும் அதிர்ச்சி அடைகிறான். வசுந்தரா தேவி அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்டதற்கு காரணம் மகேஷ் தான் என்பது சத்யாவிற்கு தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி அந்த இன்னொரு இன்வெஸ்டரும் மகேஷ் தான் என்ற உண்மையும் உடைகிறது.
கவலையில் துளசி: இதே நேரம் வெற்றி துளசி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து அவளுக்கு தொடர்ந்து பணிவிடை செய்வதை பார்த்து வருத்தப்படுகிறாள். அதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என நினைக்கும் துளசி, அஞ்சலிக்கு போன் செய்து நீ உடனே ஆபிசுக்கு கிளம்பி வா ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டும் என சொல்ல, அஞ்சலி நிச்சயம் அக்கா இதைப்பற்றித்தான் பேசபோகிறார் என்பதை தெரிந்து கொண்டு, எனக்கு வேலை இருக்கு என சொல்கிறார். ஆனால், துளசி நீ கட்டாயம் வர வேண்டும் என்று சொல்ல அஞ்சலி சரி என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications