‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப்படை அமைத்த துளசி.. மகேஷை மாட்டிய அஞ்சலி.. கெட்டி மேளம்!

சென்னை: துளசி ஆபீஸில் இருக்க வெற்றி ஒரு கேரியர் முழுவதும் அவளுக்கு பிடித்த உணவுகளை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட சொல்ல துளசி நீங்க போங்க நான் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். ஆனால் வெற்றி நீங்கள் சாப்பிட்டால் தான் நான் போவேன் என்று சொல்லி அடம்பிடிக்க துளசி கொஞ்சமாக எடுத்து வைத்து சாப்பிடுகிறாள். பிறகு வெற்றியை அனுப்பி வைக்கிறாள். அதன் பிறகு அஞ்சலியை அங்கு வர வைத்து அவளை சாப்பிட வைத்து அழகு பார்க்கிறாள். அந்த சமயத்தில் ஒரு பெண் இரவில் ஆபிஸ் முடித்து வீட்டுக்குச் செல்லும் போது பசங்க ரொம்ப தொல்லை பண்றாங்க, பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்கிறாள்

இதனால் துளசி தனது ஆபீஸில் உள்ளவர்களிடம் பேசி சிங்கப்பெண்கள் அதிரடி படை என்ற அமைப்பை உருவாக்குகிறாள். அன்று இரவே துளசி சோதனைக்கு செல்ல அஞ்சலியும் அவளுடன் செல்கிறாள். அப்போது ஆண்கள் சிலர் துளசியிடமே தப்பாக பேசி சிக்கி கொள்கின்றனர். அஞ்சலி அங்கு நின்று கொண்டிருக்க இதை பார்க்க மகேஷ் அவளிடம் வந்து நீ எதுக்கு இங்கே நிக்குறாவா அஞ்சலி என பேசுகிறான். ஆனால்,போலீஸ் மகேசை தவறாக நினைத்து பிடிக்க, மகேஷ் நான் அஞ்சலியின் கணவர் என்று சொல்கிறான். ஆனால் அஞ்சலி, எனக்கு அவனை யார் என்று தெரியாது என்று சொல்ல மகேஷ் ஷாக் ஆகிறான்.

Getti melam promo
Photo Credit:

கெட்டி மேளம்: மகேஷை போலீசார் கைது செய்ததைப்பார்த்த துளசி, போலீசாரிடம் அவரை விடுங்க என்று சொல்லி அஞ்சலிக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம் இருக்கு என்று சொல்லி மகேஷை காப்பாற்றுகிறாள். பிறகு சத்யா மகேசை சந்தித்து நீ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர, அது எனக்கு நல்லாவே தெரியுது. நீங்க ரெண்டு பேரும் சேர நான் உனக்கு உதவி செய்கிறேன் என சொல்கிறான். அடுத்த நாள் அஞ்சலி துளசி ஆபீஸில் இருக்க அப்போது அவளுக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது.

மகிழ்ச்சியில் அஞ்சலி: அந்த போன் காலில் இன்வெஸ்டர் அவளுடைய இன்ஜினுக்கு ஒரு சைன் கிடைத்திருப்பதாகவும் அதனால் ஒரு பெரிய தொகையை போட்டு தருவதாகவும் சொல்ல அஞ்சலி சந்தோஷம் அடைகிறாள். உடனே சத்யாவுக்கு போன் செய்து தன்னை பிக்கப் செய்து கொள்ளும்படி சொல்ல, சத்யா நான் வெளியில் இருக்கிறன் நீங்க ரேபிடோ போட்டு வாங்க என சொல்கிறான். உடனே சத்யா மகேஷ்க்கு தகவல் கொடுக்க மகேஷ் ரேபிடோ டிரைவராக ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்தபடி வந்து நிற்கிறான். அஞ்சலியின் சந்தோஷத்துக்கு காரணம் கேட்க தனது பிசினஸுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக சொல்லி சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X