கனவில் வந்த கருப்பசாமி.. நிலத்தில் வரப்போகும் விபரீதம்.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சனிக்கிழமை எபிசோடில் அஞ்சலி, துளசி அனைவரும் அப்பா வாங்கிய இடத்தை பார்க்க செல்கின்றனர். அந்த இடத்தை பார்த்ததும் லட்சுமி கண்கலங்கி அழத் தொடங்குகிறார். மேலும், அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது உங்க அப்பாவின் பல நாள் கனவு. இந்த இடத்தில் எப்படி வீடு கட்ட வேண்டும். நாம எல்லாரும் சேர்ந்து எப்படி சந்தோஷமா இந்த வீட்டில் வாழ வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், இன்னைக்கு குடும்பம் மொத்தமும் சிதறிப்போச்சு, அப்போ அவர் நம்ம கூட இல்லை என சொல்கிறாள்.

இதையடுத்து சண்முகம், இடத்தை பார்த்த மகிழ்ச்சியில் இந்த இடத்தில் பூஜை அறை, இந்த கடத்தில் ஹால், மாடியில் அஞ்சலிக்கும், துளசிக்கும் தனி அறை என சொல்லிக்கொண்டே போன அதிர்ச்சி அடையும் லட்சுமி இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும். நானும் என் கணவரும் சேர்ந்து இந்த விஷயத்தை பேசி இருக்கோம். அப்படி இருக்கும் போது இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க, சண்முகம் திகைத்துப்போய் நிற்கிறார். பின், நீங்க சிவராமனுக்கு ஃபோன் செய்து நிலத்தை மீட்பது பற்றி சொன்னேன், அப்போத்தான் இதைபற்றி எல்லாம் அவன் சொன்னான் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

Getti melam promo
Photo Credit:

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி, துளசி இருவரும் அப்பாவின் கனவு இல்லத்தை கட்ட முடிவெடுத்து, ஒரு நல்ல நாளில் பணத்தை கொடுத்து மீட்டுவிடலாம் என சொல்கின்றனர். அதன்பின் வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து, இருவரும் முதலில் நிலத்தை மீட்க வேண்டும் என்பதற்காக சம்மந்தப்பட்ட நபரை சென்று சந்திக்கின்றனர். இவர்கள் போவதற்கு முன்பாகவே மீனாட்சி அவருக்கு போன் செய்து பணத்தை கொடுத்தாலும் நிலத்தை தர முடியாது என மறுக்கிறான். அதன் பிறகு எப்படியாவது நிலத்தை மீட்டாக வேண்டும் என அஞ்சலி மற்றும் துளசி மீண்டும் அவரை சென்று சந்திக்க அவர் மீனாட்சிக்கு போன் செய்து பேசுகிறார்.

மீனாட்சியில் பிளான்: இதையடுத்து, மீனாட்சி, அந்த நிலத்தை கொடுத்துருங்க என்று சொல்கிறாள். இதையடுத்து அந்த நபர் என்ன மேடம் நீங்கதான் நிலத்தை கொடுக்க வேண்டாம்னு சொன்னீங்க இப்போ கொடுக்க சொல்றீங்க என்று கேள்வி கேட்கிறார். உடனே அஞ்சலி, ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டா அதுல பெரிய சந்தோஷம் கிடைக்காது அவங்க சந்தோஷமா கனவு இல்லத்தை கட்ட ஆரம்பிக்கட்டும் இடையில நான் போய் பிரச்சனை செய்கிறேன் அப்பதான் மொத்த குடும்பமும் உடைந்து போகும் என தனது திட்டத்தை சொல்கிறார்.

கனவில் வந்த கருப்பசாமி: மறுபக்கம், லட்சுமி தூங்கிக் கொண்டிருக்க கருப்பு சாமி உருவத்தில் வருகிறது. இதனால் பயந்து போன லட்சுமி பயப்படுகிறாள். மேலும் கனவில் வரும் கருப்ப சாமி, வெற்றி உருவத்தில் வந்து, நிலத்தில் பிரச்சனை உண்டாக போவதாகவும் பெரிய பஞ்சாயத்தை சந்திக்க போவதாகவும் எச்சரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X