சுப்ரமணி தான் என் புருஷனா?! கெட்டி மேளம் சீரியலில் உடைந்தது மெகா சஸ்பென்ஸ்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்று அஞ்சலி, துளசி இருவரும் அப்பாவின் கனவு இல்லத்தை கட்ட முடிவெடுத்து பணத்தை திரட்டி அந்த நில பத்திரத்தை மீட்கின்றனர். இதையடுத்து, லட்சுமி தூங்கிக் கொண்டிருக்க கருப்பு சாமி உருவம் வருகிறது. இதனால் பயந்து போன லட்சுமி பயப்படுகிறாள். மேலும் கனவில் வரும் கருப்ப சாமி, வெற்றி உருவத்தில் வந்து, வீடு கட்டுவதில் பிரச்சனை உண்டாக போவதாகவும் பெரிய பஞ்சாயத்தை சந்திக்க போவதாகவும் எச்சரிக்கிறார்.

இதனால், லட்சுமி பதற்றம் அடைந்து அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு தூங்காமல் இருந்ததமால், உடல் நிலை சரியில்லாமல் போகிறது. ரேவதி இந்த விஷயத்தை தெரியப்படுத்த அஞ்சலி, துளசி என இருவரும் பதறி அடித்து வீட்டுக்கு வருகின்றனர். லட்சுமி மருத்துவனைக்கு அழைத்து செல்ல, லட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு டிபி அதிகமாக்கி இருப்பதாகவும், டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுகிறார். பிறகு அப்பா ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்ட போறோம், அப்படி இருக்கும் போது என்னமா உனக்கு கவலை என துளசி விசாரிக்க, ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்ட போறோம். ஆனா, உங்க அப்பா நம்ம கூட இல்லையே? என்று வருத்தப்படுகிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டி மேளம்: இதனால் அஞ்சலி மற்றும் துளசி என இருவரும் சுப்ரமணியை சந்தித்து எங்களுக்கும் அப்பாவுக்கும் இடையே தெரிஞ்ச நபர் நீங்க மட்டும்தான். எப்படியாச்சு அப்பாவை வர சொல்லுங்க, அம்மா அப்பாவை நினைத்து மிகவும் கவலையில் இருக்காங்க என்று பேசுகின்றனர். பிறகு சுப்பிரமணி இரவில் முகத்தை மறைத்துக் கொண்டு லட்சுமியை சந்தித்து கூடிய சீக்கிரம் நான் வருவேன். நீ கவலைப்படாதே, பசங்க நாம ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்ட போறாங்க, அதை நினைச்சு சந்தோஷப்படு என்று சொல்கிறார். லட்சுமி உங்க முகத்தை காட்டுங்க என்று சொல்ல என்னால இப்போ அதை செய்ய முடியாது என சிவராமன் சொல்லி விடுகிறார்.

கெஞ்சும் அஞ்சலி: இப்படி இருவரும் பேசிக்கொண்டே இருக்க லட்சுமி அப்படியே தூங்கி விட சிவராமன் அங்கிருந்து கிளம்பி வருகிறார். அடுத்த நாள் காலையில் லட்சுமி சிவராமனை சந்தித்து, நேற்று வந்தார் அவர் பேசிக்கொண்டே இருக்கும் போது நான் தூங்கிவிட்டேன், அவரை போனாவது பண்ண சொல்லுங்க என்று சொல்ல சிவராமன் யாருக்கும் தெரியாமல் போன் செய்வதற்காக கடைக்கு செல்ல, லட்சுமி அவரை பின்தொடர்ந்து செல்கிறாள். பின் சுப்ரமணி ஃபோன் செய்து சிவராமன் குரலில் பேச லட்சுமி இதை பார்த்து ஷாக் ஆகிறாள். சுப்ரமணியை பிடித்து நீ எதுக்கு என் புருஷன் மாதிரி அவருடைய குரலில் பேசுற என சத்தம் போடுகிறாள்.

லட்சுமிக்கு தெரியவந்த உண்மை: ஒரு கட்டத்தில் அங்கு வந்த முருகன் அவர் அப்பாதான் என்ற உண்மையை உடைக்க லட்சுமி அதை நம்ப மறுக்க சிவராமன் அவருக்கும் லட்சுமிக்கும் தெரிந்த ஒரு ரகசியத்தை மட்டும் சொல்ல லட்சுமி அதைக் கேட்டு ஷாக் ஆக்கிறாள். சுப்ரமணியாக தங்களுடன் இருப்பது கணவர் சிவராமன் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X