சிவராமனிடம் கெஞ்சும் மகேஷ்.. துளசி சொன்ன வார்த்தை..கெட்டி மேளம்!

சென்னை: கெட்டிமேளம் நேற்றைய எபிசோடில் துளசி வீட்டிற்கு வரும் வெற்றி, துளசியை வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால், துளசி நான் உத்தமி என்பதை நிரூபிக்கும் வரை நான் அந்த வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்கிறாள். மறுபக்கம், சத்யா குடித்துவிட்டு வர அஞ்சலி அவனை திட்டுகிறாள். அப்போது,சத்யா எப்படி வாழனும்னு தெரியாம இருந்த எனக்கு வாழ்க்கைனா என்னனு சொல்லி கொடுத்தது நீங்க தான்.. நீங்க என்னை நம்பாதது தான் எனக்கு வருத்தமா இருக்கு என சொல்கிறான். நானா சொல்ற வரைக்கும் என்னுடைய பிரச்சனையை பத்தி கேட்க மாட்டேன், என்ன முழுசா நம்புவேன் என்று சத்தியம் பண்ணி கொடுங்க என்று சத்யா கேட்க, அஞ்சலி சத்தியம் செய்து கொடுக்கிறாள்.

இன்றைய எபிசோடில், அஞ்சலி சத்யாவிடம், குடிச்சிட்டு சாப்பிடாம இருக்கக் கூடாது என சத்யாவை சாப்பிட கூப்பிட அப்போது துளசி ஃபோன் செய்து, டைம் ஆகுது ஏன் இன்னும் வீட்டுக்கு வராமல் இருக்க என்று கேட்கிறாள். அப்போது அஞ்சலி, சத்யா பற்றி பேச ஆரம்பிக்க துளசி, அவனை நம்பாத என கோபப்பட அஞ்சலி எனக்கு சத்யா மேல் நம்பிக்கை இருக்கு அக்கா நிச்சயம் அவர் தப்பானவராக இருக்க மாட்டார் என்ன சொல்கிறாள். இதைத்தொடர்ந்து லட்சுமி, துளசியிடம் என்னதான் இருந்தாலும் நீ அந்த வீட்ல தான் இருக்கணும்.. அஞ்சலியோட வாழ்க்கை தான் இப்படி ஆயிடுச்சு நீயாவது நல்லபடியாக வாழனும் என்று சொல்ல துளசி, நான் எந்த தப்பும் பண்ணல என்பதை நிரூபிச்சுட்டு என் புருஷனோட சேர்ந்து வாழ்வேன் என்று சொல்கிறாள்.

Getti melam promo
Photo Credit:

கெட்டிமேளம்: மறுபக்கம், சிவராமன் அடைத்து வைத்துள்ள மகேஷுக்கு சாப்பாடு கொடுக்க வர மகேஷ் யோவ் மாமா.. என்னை விட்டுடு உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் என்று சொல்கிறான். என் குழந்தைக்காக நான் உயிரோடு இருக்கணும் என்று சொல்ல சிவராமன் நீ மத்தவங்களை அடைச்சு வச்சு கொடுமை படுத்தும்போது அவங்களுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்.. உன்ன பார்க்கும்போதெல்லாம் நீ எங்களுக்கு செய்த துரோகம் தான் நினைவுக்கு வருது. நீ எங்களுக்கு பண்ணத உனக்கு திருப்பி பண்ணனும்னு தோணுது அந்த அளவுக்கு கோவம் வருது என சொல்கிறார். வீட்டில்,துளசி தியாவுக்கு சாப்பாடு கொடுக்க தியா நம்ம வீட்டுக்கு போகலாம் என அடம் பிடிக்க அஞ்சலி அம்மா ஒரு வேலையா இந்த வீட்டிற்கு வந்திருக்காங்க அந்த வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லி சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X