சிவராமன் பிடியிலிருந்து எஸ்கேப்பாகும் மகேஷ்.. நடந்தது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: சிவராமன் அடைத்து வைத்துள்ள மகேஷுக்கு சாப்பாடு கொடுக்க வர மகேஷ் யோவ் மாமா.. என்னை விட்டுடு உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் என்று சொல்கிறான். என் குழந்தைக்காக நான் உயிரோடு இருக்கணும் என்று சொல்ல சிவராமன் நீ மத்தவங்களை அடைச்சு வச்சு கொடுமை படுத்தும்போது அவங்களுக்கும் இப்படித்தான் குடும்பம் இருக்கும்னு யோசிச்சியா? உன்ன பார்க்கும்போதெல்லாம் நீ எங்களுக்கு செய்த துரோகம் தான் நினைவுக்கு வருது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறான்.
மறுபக்கம், வீட்டில் துளசி, வெற்றி ஏன் இங்கு இருக்கவில்லை, அவருக்கு அவரின் குடும்பம் தான் பெரிதாக தெரிகிறது. அவர் என்னைப்பற்றி எதுவும் யோசிக்கவே இல்லை என சொல்லி வருத்தப்படுகிறாள். மறுபக்கம், தியாவுக்கு சாப்பாடு கொடுக்க தியா நம்ம வீட்டுக்கு போகலாம், எனக்கு அப்பா வேண்டும் என அடம் பிடிக்க துளசி ஆத்திரப்பட்டு தியாவை திட்டிவிடுகிறாள். இதையடுத்து, அஞ்சலி அம்மா ஒரு வேலையா இந்த வீட்டிற்கு வந்திருக்காங்க அந்த வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லி தியாவை சமாதானப்படுத்துகிறாள்.

கெட்டிமேளம் : இன்றைய எபிசோடில், வெற்றி துளசியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறான். வழியில் அஞ்சலி வெற்றியை தடுத்து நிறுத்தி, அக்கா உங்க மேல ரொம்ப கோவத்துல இருக்காங்க. இப்போதைக்கு அவங்கள பார்க்க வர வேண்டாம். அவங்க மேல எந்த தப்பும் இல்லை என நிரூபித்து விட்டு அதுக்கப்புறம் அக்காவை வந்து பாருங்க என்று சொல்கிறாள். வெற்றி அம்மாவை அனுப்புனதே எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு நான் துளசியை பார்க்கணும் என்று சொல்ல, அஞ்சலி மாமா இப்போதைக்கு அக்காவை பார்க்கிறதுக்கு சரியா இருக்காது மாமா என சொல்லி விடுகிறாள்.
சுப்பிரமணி: இதையடுத்து, அஞ்சலி கேரேஜுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு கிளம்ப. கேரேஜில் சுப்பிரமணி, சத்யாவிடம் இன்னைக்கு அஞ்சலி என்ன குழம்பு கொண்டு வருவா தெரியுமா, சூப்பரா இருக்கும் என பேசிக்கொண்டு இருக்க சத்யா அது எப்படியா உனக்கு தெரியும் என்று கேட்கிறான். அதான் என் நண்பன் சிவராமன் கொடுத்து சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். பிறகு அஞ்சலி சாப்பாடு கொண்டு வர சுப்பிரமணி சொன்னது போல குழப்பு இருக்கிறது. நாளைக்கு இந்த குழம்பு வச்சு இந்த கீரை செஞ்சு கொண்டு வாங்க சூப்பரா இருக்கும் என்று சொல்கிறான். அப்போது,சத்யா சொந்த வீட்ல சாப்பிடற சாப்பாடே மறந்து போகுது.. நீ எப்படியா இந்த அளவுக்கு ஞாபகம் வச்சிருக்க என்று கேள்வி கேட்கிறான். அப்போது சுப்பிரமணி ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறான்.
தப்பிக்கும் மகேஷ்: மறுபக்கம், மகேஷ் குடோனில் கண் கட்டை அவிழ்ந்து கண்ணை திறக்க, அங்கே கூர்மையாக இருக்கும் ஒரு பொருளை பயன்படுத்தி தனது கட்டுக்களை அவிழ்த்துக் கொள்கிறான். பிறகு தனது அடியாட்களுக்கு ஃபோன் செய்து குடோனுக்கு வரவைத்து இன்னும் கொஞ்ச நேரத்துல சிவராமன் இங்க வருவான். அவன அப்படியே மடக்கிப் பிடிச்சுடுங்க என்று சொல்கிறான். பிறகு சிவராமன் குடோனுக்கு வர திடீரென தடுமாறி கீழே விழுகிறார். அப்போது ரவுடிகள் மறைந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். மகேஷ் அவனை பிடிங்க என்று சொல்ல ரவுடிகள் சிவராமனை துரத்தி ஓடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











