முருகன் உயிரை காப்பாற்றிய சிவராமன்.. ஏமாந்து போன மகேஷ்.. கெட்டிமேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில், மகேஷிடம் இருந்து தப்பித்து ஓடி வந்த சிவராமன் எதிர்பாராத விதமாக அந்த பக்கமாக வந்த சத்யா மீது மோத சத்யா நீ என்னய்யா இங்க ஓடிக்கிட்டு இருக்க, உனக்கு BPஇருக்கு ஆன நீ, இங்கே ஓடிக்கிட்டு இருக்க என்று சொல்ல, சிவராமன் திடீரென அழத்தொடங்குகிறார். இதைப்பார்த்த சத்யா, யோவ் பெருசு என்ன ஆச்சு என்று கேட்க, நாய் துரத்தியதால் அழுவதாக சொல்லி சமாளிக்கிறான்.
மறுபக்கம், வெற்றி மீது துளசி கோவத்தில் இருப்பதால், அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் என நினைக்கும் வெற்றி அஞ்சலியை சந்தித்து எனக்கு உங்க அக்காவோட குரலையாவது கேட்கணும், நீ பேசுற மாதிரி உங்க அக்காவிற்கு பேசு என்று சொல்ல, அஞ்சலி துளசிக்கு ஃபோன் செய்து சாப்டியா என்ன பண்ற என்று கேட்க, ஒரு கட்டத்தில் துளசி நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே, வெற்றி அங்க வந்து இருக்காரா என்று கேட்கிறாள். பிறகு அஞ்சலி மாமா தான் பேச சொன்னாரு என்று சொல்ல துளசி திட்டிவிட்டு ஃபோனை வைக்கிறாள்.

கெட்டி மேளம்: கேரேஜில் சிவராமன் உடம்பு வலியில் தவிக்க முருகன் கை கால் கடைபிடித்து விட அவனுக்கு அப்பாவின் கை, கால்களை பிடிப்பது போலவே தோன்ற முருகன் கண்கலங்குகிறான். மகேஷின் அடியாட்கள் சிவராமனை தேடுகின்றனர். ஆனால், அவன் எங்கு தேடியும் கிடைக்காததால், மகேஷ் ஆத்திரப்படுகிறான். அவன் அடி ஆட்களிடம், அந்த ஆள் கையில் நான் அடித்த காயம் இருக்கும், அது தான் அவனை கண்டுபிடிக்க ஒரே வழி என்கிறான். இதையடுத்து, முருகன் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருக்க, அவனை வழியில் பார்க்கும் மகேஷ், சிவராமனை வரவைக்க இதுதான் சரியான திட்டம் என்று, முருகன் மற்றும் ரேவதி கடத்துகிறான்.
மகேஷின் திட்டம்: அவர்களிடம் நல்லவன் போல பேசி வீட்டுக்கு அழைத்து சென்று, நான் இப்போது மாறிவிட்டேன். என் வாழ்க்கையே அஞ்சலிக்காகத்தான் வாழ்கிறேன். என்னைப்பற்றி அஞ்சலியிடம் எடுத்து சொல்லுங்க என சொல்லி நாடகமாடுகிறான். பின் இருவரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து அதன் மூலம் சிவராமனை அங்கு வரவைக்க முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











