என் மனைவி கலங்கமில்லாதவ உத்தமி.. நிரூபிக்க போராடும் வெற்றி.. கெட்டி மேளம்!
சென்னை: மகேஷ் தான் முருகன், ரேவதியை கடத்தி இருப்பான் என்று சந்தேகப்படும் சிவராமன் ரவுடிகளை அழைத்துக் கொண்டு, மகேஷ் வீட்டிற்கு செல்கிறார். மகேஷ் வீட்டில் ரேவதி மற்றும் முருகனை கடத்தி வைத்து இருக்கிறான். அந்த நேரம் சிவராமன் ரவுடிகளுடன் வீட்டிற்குள்ளே புகுந்து புகையை அடிக்கிறார். புகை எங்கிருந்து வருவது என்று மகேஷ் யோசித்துக்கொண்டு இருக்க, சிவராமன் மற்ற ரௌடிகளை அடித்துவிட்டு முருகன் மற்றும் ரேவதியை அழைத்து கொண்டு வெளியே வருகிறார்.
சிவராமனை பார்த்த முருகன், நீங்க என் அப்பாதானே என்று சைகையில் கேட்க அதெல்லாம் இல்லை முதலில் நீங்கள் வீட்டுக்கு போங்க, வீட்டில் லட்சுமி உங்களை தேடிக் கொண்டு இருக்கிறாள் என சொல்ல, முருகன் நீங்க என் அப்பா தான் எனக்கு நன்றாக தெரியும் என சொல்லி கட்டிப்பிடித்து அழ, சிவராமன் உண்மையை ஒத்துக்கொண்டு, முருகனை கட்டிப்பிடித்து அழுகிறான். மகேஷ் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்றும், மகேஷ் தான், தீவிரவாதியின் முகத்தை தனக்கு வைத்து பிளாஷ்டிக் சர்ஜரி செய்துவிட்டதாக சொல்ல முருகன் ஆத்திரம் அடைகிறான்.

கெட்டி மேளம்: இவை அனைத்தையும் தூரத்தில் இருந்த ரேவதி கேட்டுவிட்டு ஓடி வந்து நீங்க தான் என்னுடைய மாமாவா? ஏன் சொல்லவில்லை என கேட்கிறாள். ஆமாம் ரேவதி, நான் தான் உன் மாமா, அதை சொல்வதற்கான நேரம் இது இல்லை, யாரும் இதுபற்றி வீட்டில் சொல்ல வேண்டாம், அதற்கான நேரம் வரும் போது சொல்லலாம் என முடிவு செய்துவிட்டு வீட்டிற்கு வருகின்றனர்.அப்போது வீட்டில் போலீசார் ஒருவர், அஞ்சலி, லட்சுமி, துளசியிடம் சிவராமனை பற்றி ஏதாவது விஷயம் தெரிந்ததா என்று கேட்கிறார்.
மகேஷ் கடத்தினான்: அப்போது கோவப்படும் துளசி, சார் இதுகுடும்பம் நடத்தும் வீடு, இந்த வீட்டிற்கு, அடிக்கடி வந்து விசாரணை நடத்துவது சரி இல்லை என்று சொல்கிறாள். அப்போது இன்ஸ்பெக்டர், உங்க அப்பா ஒரு தீவிரவாதி, அதனால் தான் நாங்கள் அடிக்கடி வந்து விசாரணை நடத்துகிறோம். அவர் நிச்சயமாக உங்களை பார்க்க வருவார் என்று பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரம் ரேவதி, முருகன், சிவராமன் என அனைவரும் வருகின்றனர். போலீசை பார்த்த சிவராமன் தன்னை கண்டுபிடித்துவிடுவாரோ என பதற்றப்படுகிறார். அப்போது முருகன், மகேஷ் தான் தன்னை கடத்தியதாக சொல்கிறான்.
மீனாட்சியின் பிளான்: மறுபக்கம் வெற்றி, துளசியுடன் ஆபாசமாக போட்டோவில் இருந்த நபரின் போட்டோவை எடுத்து அனைவரிடமும் கொடுத்து, அவனை பற்றி விசாரிக்கும் படி சொல்கிறார். அந்த போட்டோவில் இருக்கும் நபரை பார்த்த ஒருவன், வெற்றிக்கு போன் செய்து, அவனை கோவில் பார்த்ததாக சொல்ல, வெற்றி அந்த நபரை தேடி, கோவிலுக்கு செல்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மீனாட்சி, அவன் மட்டும் வெற்றியிடம் கிடைத்தால் நம்ம கதை முடிந்துவிடும் என்பதால், வேறு ஒரு ரௌடியிடம் அந்த போட்டோவை அனுப்பி அவனை கொல்ல சொல்கிறாள். இப்படி பரபரப்பாக கெட்டி மேளம் சீரியல் எபிசோட் முடிந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











