துளசிக்காக வெற்றி எடுக்கும் முயற்சி.. மீனாட்சி செய்யும் சூழ்ச்சி என்ன? கெட்டிமேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில், முருகன் மற்றும் ரேவதிக்கு வீட்டில் சுப்பிரமணியாக நடித்துக்கொண்டு இருக்கும் நபர் தான் அப்பா சிவராமன் என்பதை தெரிந்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுகிறான். இதையடுத்து, சிவராமன் இந்த விஷயத்தை வீட்டில்யாரிடமும் சொல்லவேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம், துளசியுடன் ஆபாசமாக போட்டோவில் இருந்த நபரின் போட்டோவை எடுத்து அனைவரிடமும் கொடுத்து, அவனை பற்றி விசாரிக்கும் படி சொல்கிறார். அந்த போட்டோவில் இருக்கும் நபரை பார்த்த ஒருவன், வெற்றிக்கு ஃபோன் செய்து, அவனை கோவில் பார்த்ததாக சொல்ல, வெற்றி அந்த நபரை தேடி, கோவிலுக்கு செல்கிறார்.

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், துளசியின் மானத்தை வாங்கிய அந்த நபருக்கும், துளசிக்கு போன் செய்து கோவிலுக்கு அழைத்த அந்த பெண்ணும் காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். அந்த கோவிலில் இருப்பவர் வெற்றிக்கு தெரிந்தவர் என்பதால், அவரை பார்த்ததும் அவர் வெற்றிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லிவிடுகிறார். வெற்றி அங்கே கிளம்பி சென்று அவர்களை மடக்கிப் பிடிக்க, அந்த பெண் வெற்றியின் கண்ணில் மண்ணைத் தூவ இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.
மீனாட்சியின் மாஸ்டர் பிளான்: இந்த விஷயம் மீனாட்சிக்கு தெரிய வந்ததை அடுத்து, ஒரு ரௌடியிடம் இருவரின் போட்டோவையும் அனுப்பி இருவரையும் கொல்ல சொல்லி ஆட்களை அனுப்புகிறாள். இதையடுத்து, வயதானவர்கள் போல வேஷம் போட்டுக்கொண்ட அந்த ரௌடிகள், இருவரையும் சந்தித்து, மீனாட்சி அனுப்பினாங்க உங்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அனுப்ப சொன்னாங்க என்று சொல்ல, இருவரும் அவர்கள் சொன்னதை நம்பி, அவர்களுடன் செல்கின்றனர். இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்த இடத்தில் வைத்து தீத்துக்கட்ட முயற்சி செய்கின்றனர். இதையடுத்து, அவனை கத்தியால் குத்தப்போகும் நேரத்தில், வெற்றி அங்கு வந்து அவர்களுக்கு ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











