களங்கத்தை போக்கிய வெற்றி.. துளசி கொடுத்த அதிர்ச்சி.. கெட்டி மேளம்!

சென்னை: வெற்றி எப்படியும் இந்த விஷயத்தை கண்டுபிடித்துவிடுவான் என தெரிந்து கொண்ட மீனாட்சி, வேறு ஒரு ரௌடியிடம் இருவரின் போட்டோவையும் அனுப்பி இருவரையும் கொல்ல சொல்லி ஆட்களை அனுப்புகிறாள். இதையடுத்து, வயதானவர்கள் போல வேஷம் போட்டுக்கொண்ட அந்த ரௌடிகள், இருவரையும் சந்தித்து, மீனாட்சி அனுப்பினாங்க உங்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அனுப்ப சொன்னாங்க என்று சொல்ல, இருவரும் அவர்கள் சொன்னதை நம்பி, அவர்களுடன் செல்கின்றனர்.

கெட்டி மேளம்: இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்த இடத்தில் வைத்து தீத்துக்கட்ட முயற்சி செய்கின்றனர். இதையடுத்து, அவனை கத்தியால் குத்தப்போகும் நேரத்தில், வெற்றி அங்கு வந்து அவர்களுக்கு ஷாக் கொடுத்து, அங்கிருந்த ஜோடியை காப்பாற்றி அவனை வீட்டிற்கு அழைத்து வந்து அனைவர் முன்பும் அடிக்கிறான். இதையடுத்து கதிர், இவனை ஏன்டா இன்னும் உயிரோடு விட்டுவெச்ச கொன்றுவிட வேண்டியது தானே என்று சொல்ல, இவனை கொன்றுவிட்டால், அவனை அனுப்பியது யார் என்று தெரியாமல் போய்விடும் அதற்காகத்தான் விட்டுவைத்து இருக்கிறேன் என்று சொல்ல, கதிர் அவனை அடி அடி என்று அடித்து, உண்மைய சொல்லுடா என்று சொல்ல அவன் இது எல்லாத்தையும் உங்க பிஏ சொல்லி தான் செய்தேன் என சொல்கிறான்.

Getti melam promo
Photo Credit:

தெரியவந்த உண்மை: இதை நம்பாத அபிராமி, அவனே ஜெயில்ல இருக்கான் அவன் எப்படி சொல்வான் உன் பின்னாடி வேற யாரும் இருக்காங்க உண்மைய சொல்லு என அவனை பளார் பளார் என அறைகிறாள். ஈஸ்வரமூர்த்தி ஐ ஜி-க்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தை சொல்ல, அவன் சார் தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க. எங்கள விட்டுடுங்க கண் காணாத இடத்துக்கு போயிருவோம் என கெஞ்சுகின்றனர். வெற்றி அது எப்படி உங்களை விட முடியும் என்று இழுத்துச் சென்று துளசி காலையில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறான். மேலும் துளசி மீது எந்த தவறும் இல்லை அது அனைத்தும் ஏஐ புகைப்படங்கள் என அவனால் வாக்குமூலம் கொடுக்க வைத்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுகிறான். அதன் பிறகு வெற்றி துளசியை வீட்டுக்கு அழைக்க துளசி வர மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X