வெற்றி மீது கோபத்தை கொட்டிய துளசி.. அஞ்சலியால் கடுப்பான மகேஷ்.. கெட்டி மேளம்!
சென்னை: துளசி வெற்றியுடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால், சிவராமன் ஒரு ஐடியாவை கொடுக்கிறார். அதாவது,ஒரு பொண்ணோட நெருங்கி பழகுனா துளசிக்கு பிடிக்காது.. அதனால அவ உன்னோட வந்துருவா என்று சொல்ல ஏற்கனவே துளசி கழுத்தில் தெரியாமல் தாலி கட்டி பிறகு திவ்யாவுடன் நிச்சயம்னு நிறைய பண்ணிட்டேன் திரும்பவும் இப்படி ஏதாவது பண்ணா துளசி எனக்கு கிடைக்கவே மாட்டா என்று பதற சிவராமன் ஒரு ஆம்பளைங்க கேடுகெட்ட போட்டுவிட்டு நடிக்க வைப்போம் என்று சொல்கிறார்.
பிறகு வெற்றி இப்படியெல்லாம் யார் நடிப்பா என்று கேட்க சிவராமன் சத்யாவை கண்ணை காட்ட பிறகு இருவரும் சத்யாவை குறுகுறுவென பார்க்க சத்யா உங்க திட்டம் புரிஞ்சு போச்சு.. என்னால எல்லாம் இப்படி நடிக்க முடியாது என்று சொல்கிறான். பிறகு இருவரும் சேர்ந்து அவனை சமாதானப்படுத்தி நடிக்க ஒப்புக் கொள்ள வைக்கின்றனர். நலினத்தோடு நடிக்கணும் என சிவராமன் பிராக்டிஸ் கொடுக்கிறார். பிறகு அஞ்சலி கோலம் போட்டுக் கொண்டிருக்க பெண் வேடத்தில் வந்த சத்யா வீட்டு கதவை தட்டி வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக பேச அஞ்சலி இதை துளசிக்கு தெரியப்படுத்த துளசி இதை பார்த்து ஷாக் ஆகிறாள். நீ என்கூடவே வந்துடு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று சொன்னதும் துளசி அதிர்ச்சி அடைகிறாள்.

கொஞ்ச நேரம் கழித்து சத்யா இன்னைக்கு 6 மணிக்குள்ள சொல்ற இடத்துக்கு வா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல வெற்றி துளசியிடம் 6 மணிக்குள்ள ஒரு முடிவை சொல்லு.. நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன் என்று சொல்கிறான். அதாவது சத்யா வெற்றிடம் நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று பேச இதை பார்த்த துளசி அவனிடம் சத்தம் போடுகிறாள். யாரை யார் கல்யாணம் பண்ணிக்கிறது என கோபப்பட்டு பிரச்சனை செய்ய உங்க புருஷன் மேல இருக்க காதலை ஏன் இப்படி கோபமாக காட்டுறீங்க என்று சொல்லி எஸ்கேப் ஆகிறான்
கெட்டிமேளம்: அதை தொடர்ந்து வெற்றி துளசியை வீட்டுக்கு அழைக்க துளசி வர மாட்டேன் என மறுக்கிறாள். மறுபக்கம் மகேஷ் அஞ்சலியை பார்ப்பதற்காக கேரேஜ் வருகிறான். சிவராமன் வந்தாலும் கையும் களவுமாக பிடித்து விடலாம் என கணக்கு போடுகிறான். இந்த சமயத்தில் அஞ்சலி சத்யாவுடன் பைக்கில் உட்கார்ந்து வர இதை பார்த்து கடுப்பாகும் மகேஷ் இவன் கூட எல்லாம் எதுக்கு உட்கார்ந்து வர? இவன் ஏடாகூடமா வண்டி ஓட்டுவான் என்று சொல்ல அப்போ அவன் தான் ஓட்டக்கூடாது நான் ஒரு பெண் என அஞ்சலி வண்டி ஓட்ட சத்யா பின்னாடி உட்கார மகேஷ் மேலும் கடுப்பாகிறான்.
மகேஷின் திட்டம்: அஞ்சலி நாளைக்கு அப்பாவோட பிறந்தநாள் அப்பா திரும்ப வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று சொல்கிறாள். பிறகு சிவராமன் கேரேஜ் வர பின்னாடியே முருகன், ரேவதி வருகின்றனர். நாளைக்கு உங்களுடைய பிறந்தநாள் இந்த பிறந்தநாள் விழாவில் நீங்க தான் சிவராமன் அப்பா என்ற உண்மையை சொல்லிடுங்க என்று பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











