சிவராமன் கொடுத்த கிப்ட்.. மொத்தமாக உடைந்த லட்சுமி.. கெட்டி மேளம் !
சென்னை: மகேஷ் அஞ்சலியை பார்ப்பதற்காக கேரேஜ் வருகிறான். சிவராமன் வந்தாலும் கையும் களவுமாக பிடித்து விடலாம் என கணக்கு போடுகிறான். இந்த சமயத்தில் அஞ்சலி சத்யாவுடன் பைக்கில் உட்கார்ந்து வர இதை பார்த்து கடுப்பாகும் மகேஷ் இவன் கூட எல்லாம் எதுக்கு உட்கார்ந்து வர? இவன் ஏடாகூடமா வண்டி ஓட்டுவான் என்று சொல்ல அப்போ அவன் தான் ஓட்டக்கூடாது நான் ஒரு பெண் என அஞ்சலி வண்டி ஓட்ட சத்யா பின்னாடி உட்கார மகேஷ் மேலும் கடுப்பாகிறான்.
அஞ்சலி நாளைக்கு அப்பாவோட பிறந்தநாள் அப்பா திரும்ப வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று சொல்கிறாள். பிறகு சிவராமன் கேரேஜ் வர பின்னாடியே முருகன், ரேவதி வருகின்றனர். நாளைக்கு உங்களுடைய பிறந்தநாள் இந்த பிறந்தநாள் விழாவில் நீங்க தான் சிவராமன் அப்பா என்ற உண்மையை சொல்லிடுங்க என்று பேசுகின்றனர்.

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், மகேஷ் ஃபோனில் இவர்கள் பேசுவது எல்லாத்தையும் ரெக்கார்ட் செய்கிறான். அதன் பிறகு அந்த ரெக்கார்டிங் கேட்டு பிறந்தநாள் விழாவில் உன்னை மடக்கிப் பிடிக்கிறேன் என முடிவெடுக்கிறான். அதைத்தொடர்ந்து பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்கிறது. மகேஷின் ஆட்கள் இங்கு பதுங்கி இருக்கின்றனர். சிவராமன் வரும் போது எப்படியாவது அவனை பிடித்துவிட வேண்டும் என காத்து இருக்கின்றனர். இந்த பிறந்த நாள் விஷயம் எப்படியோ போலீசுக்கும் தெரிய வருவதால், நிச்சயம் தீவிரவாதி சிவராமன் பிறந்த நாளுக்கு வருவான் என தகவல் கிடைக்க இதே மண்டபத்துக்கு வந்து சோதனை செய்கின்றனர்.
கண்கலங்கும் லட்சுமி: அப்போது மண்டபத்துக்குள் வந்த சிவராமன் போலீசை பார்த்து மறைந்து கொள்கிறார். பிறகு போலீஸ் கிளம்பியதும் முருகனிடம் இப்போதைக்கு நிலைமை சரியில்லை.. உண்மையை சொல்வது சரியா இருக்காது என வாக்கிய கிப்டை முருகனிடம் கொடுத்து விட்டு வெளியே வந்து விடுகிறார். முருகன் அப்பா கொடுத்ததாக சொல்லி அந்த கிப்டை லட்சுமியிடம் கொடுக்க லட்சுமி பிரித்து பார்த்து கண் கலங்கி, தனது கணவர் சிவராமன் என தேடி இங்குமங்கும் ஓடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











