சிவராமனை காப்பாற்றிய ரேவதி.. பிறந்தநாள் விழாவில் நடந்தது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் முருகன் சிவராமனிடம் பிறந்தநாள் ஃபங்ஷன் கொண்டாட இருக்கும் விஷயத்தை மகேஷ் ஃபோனில் ஒட்டு கேட்டு விடுகிறான். அதன் பிறகு அந்த ரெக்கார்டிங் கேட்டு பிறந்தநாள் விழாவில் உன்னை மடக்கிப் பிடிக்கிறேன் என முடிவெடுக்கிறான். அதைத்தொடர்ந்து பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்கிறது. மகேஷின் ஆட்கள் வீட்டில் பதுங்குகின்றனர்.
இதையடுத்து, போலீசுக்கும் ஏதோ தகவல் கிடைக்க அவர்களும் திடீரென வீட்டிற்கு வருகின்றனர். போலீஸ் கிளம்பியதும் முருகனிடம் இப்போதைக்கு நிலைமை சரியில்லை.. உண்மையை சொல்வது சரியா இருக்காது என வாக்கிய கிப்டை முருகனிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்து விடுகிறார். முருகன் அப்பா கொடுத்ததாக சொல்லி அந்த கிப்டை லட்சுமி இடம் கொடுக்க லட்சுமி பிரித்து பார்த்து கண் கலங்கி சிவராமன் என தேடி இங்குமங்கும் ஓடுகிறாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஏன் வீட்டுக்கு வரவில்லை, என்னை ஏன் பார்க்கவில்லை என கண்கலங்கி கதறி அழுகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் சிவராமன் கொடுத்த கிஃப்டை பிரித்துப் பார்த்த லட்சுமி அழுததை சிவராமன் பார்த்து வருத்தப்படுகிறான். உன் பக்கத்திலே இருந்துட்டு இப்படி நீ அலைகிறதை வேடிக்கை பார்க்கிற மாதிரி ஆகிடுச்சே என்று வருத்தப்படுகிறார். இதையடுத்து மகேஷ் அவரை எப்போ தான் தேடி கண்டு பிடிப்பீங்க என்று போலீஸிடம் கேள்வி கேட்க போலீஸ் சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் என்று சொல்லி கிளம்புகின்றனர். பிறகு சத்யா மறைந்து கொண்டு இருக்கும் சிவராமனை பார்த்து கலாய்க்கிறான்.
காப்பாற்றிய ரேவதி: பிறகு ரேவதி, மாமா மாட்டிக்க கூடாது என்பதற்காகத்தான் போலீசை இங்க வர வச்சு மாமாவை இங்கிருந்து போக வச்சி மகேஷிடம் இருந்து காப்பாற்றுனேன் என்று சொல்கிறாள். மேலும் எனக்கு என்ன ஆனாலும் அப்பாவை பத்தி நீ எந்த உண்மையும் யாரிடும் சொல்லக்கூடாது என சொல்கிறான். அதன் பிறகு போலீஸ் கேரேஜ்க்கு வந்து சிவராமன் குறித்து துருவி கேள்வி கேட்டு விசாரணை செய்ய சத்யா சிவராமனுக்கு சப்போர்ட் செய்து பேசி போலீஸிடம் வாக்குவாதம் செய்கிறான். பிறகு வெற்றி துளசிக்கு உதவி செய்ய துளசி வேண்டாம் என்று மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











