சிவராமனை பிடிக்க திட்டமிடும் மகேஷ்.. தனிக்குடித்தனம் செல்லும் துளசி.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் நேற்றைய எபிசோடில், ரேவதி, மாமா மாட்டிக்க கூடாது என்பதற்காகத்தான் போலீசை இங்க வர வச்சு மாமாவை இங்கிருந்து போக வச்சி மகேஷிடம் இருந்து காப்பாற்றுனேன் என்று சொல்கிறாள். மேலும், எனக்கு என்ன ஆனாலும் அப்பாவை பத்தி நீ எந்த உண்மையும் யாரிடும் சொல்லக்கூடாது என சொல்கிறான் முருகன். அதன் பிறகு போலீஸ் கேரேஜ்க்கு வந்து சிவராமன் குறித்து துருவி கேள்வி கேட்டு விசாரணை செய்ய சத்யா சிவராமனுக்கு சப்போர்ட் செய்து பேசி போலீஸிடம் வாக்குவாதம் செய்கிறான்.
கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், மகேஷ் சிவராமனை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதற்காக டிடெக்டிவ் ஒருவரை சந்தித்து சிவராமனை கண்டுபிடிக்க வேண்டும், அவன் வெளியில் இருந்தால் நானும் என் மனைவியும் நன்றாக வாழ முடியும் என்று, சிவராமனை பற்றி கண்காணிக்க சொல்கிறான். எப்படியாவது சிவராமன் பிடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.

தனிக்குடித்தனம்: மறுபக்கம் துளசியை வெற்றியுடன் தனிக்குடித்தனம் செல்ல வீடு பார்க்க சொல்கிறாள். அபிராமி எதுக்கு தனியா போகணும் என்று கேட்கிறாள். ஆனால், துளசி இல்லாத அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன். அதே நேரம் வெற்றி அம்மாவீட்டில் இருப்பது சரியாக வராது, அதனால் தான் தனிகுடித்தனம் போக போகிறோம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு எதுவுமே சொல்ல முடியாத அபிராமி, சரிமா உன் விருப்பம் என்று சொல்லி, நல்ல வீடா பாருங்க நான் பணத்தை தருகிறேன் என்கிறாள். ஆனால், துளசி பணத்தை கொடுக்க வேண்டாம் அத்தை எங்க கிட்ட இருக்குறத வச்சு நாங்க பாத்துக்கிறோம் என்ன சொல்கிறாள்.
சிவராமன் மயக்கம்: இதையடுத்து கேரேஜில் சிவராமனுக்கு மயக்கம் வந்து விழுந்து விட வரவைத்து பரிசோதனை செய்கின்றனர். இந்த பரிசோதனையில் அவருக்கு பிபி, சுகர் இருப்பது தெரிய வருகிறது. இதை கேட்டது அஞ்சலிக்கு அப்பாவிற்கு இருக்கும் அதே பிரச்சனை இவருக்கும் இருக்கே அது எப்படி என சந்தேகம் கொள்கிறாள். பிறகு வெற்றி ஒரு பெரிய வீட்டை பார்க்க துளசி அது வேண்டாம் என்று சொல்லி விட இதையடுத்து அக்கம் பக்கத்தில் எல்லோரும் இருக்கும் படி ஒரு சிறிய வீட்டை பார்த்து ஓகே செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











