மீனாட்சி தான் எல்லாத்துக்கும் காரணம்.. கதிருக்கு தெரியவந்த உண்மை.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியல், கேரேஜில் சிவராமனுக்கு மயக்கம் வந்து விழுந்து விடுகிறார். இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்கின்றனர். இந்த பரிசோதனையில் அவருக்கு பிபி, சுகர் இருப்பது தெரிய வருகிறது. இதை கேட்டது அஞ்சலிக்கு அப்பாவிற்கு இருக்கும் அதே பிரச்சனை இவருக்கும் இருக்கே, அது எப்படி அப்பாவின் நண்பருக்கும் இதே பிரச்சனை இருக்கு என சந்தேகம் கொள்கிறாள். பிறகு வெற்றி ஒரு பெரிய வீட்டை பார்க்க துளசி அது வேண்டாம் என்று சொல்லி விட இதையடுத்து அக்கம் பக்கத்தில் எல்லோரும் இருக்கும் படி ஒரு சிறிய வீட்டை பார்த்து ஒகே சொல்ல, துளசி பால் காய்ச்சி வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் : இன்றைய எபிசோடில், வீட்டுக்கு வந்த அபிராமி, ஈஸ்வரமூர்த்தியிடம் வெற்றி, துளசி வாடகை வீட்டில் பால் காய்ச்சி எப்படி விஷயத்தை சொல்ல ஈஸ்வரமூர்த்தி வெற்றி என்கிட்ட வந்து எனக்கு இது வேணும்னு கேட்டா அடுத்த நிமிஷம் செய்து கொடுப்பேன்.. ஆனா நான் தோத்து போன தொகுதில போய் வீடு எடுத்து என்ன அவமானப்படுத்தியிருக்காங்க என்று கோபப்படுகிறான். அபிராமி அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க.. ரெண்டு பேரும் சொந்தக்காலில் நிக்கணும்னு ஆசைப்படுறாங்க.. அவங்க ஆசைப்படியே இருக்கட்டும் என்று சொல்கிறாள். மீனாட்சி என்னதான் இருந்தாலும் அவங்க தனி குடித்தனம் போனது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு என நாடகம் போடுகிறாள்.

கதிருக்கு தெரியவந்த உண்மை: பிறகு ராணியிடம் அப்பாடா ஒரு தொல்லை ஒழிஞ்சது என்ன பேச கதிர், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான். அதை தொடர்ந்து மீனாட்சிக்கு துளசியை ரூமுக்குள் அடைத்து வைத்த பெண்ணிடம் இருந்து ஃபோன் வர மீனாட்சி அவளை சென்று சந்திக்க கதிர், பின் தொடர்ந்து செல்கிறான். துளசியை அவமானப்படுத்தியது மீனாட்சி தான் என்ற உண்மை கதிருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து துளசியை சந்தித்த கதிர் நடந்த விஷயங்களை சொல்ல இது எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்ததாக சொல்கிறாள். இதையடுத்துர, கதிர் நீ அந்த வீட்ல தான் இருக்கணும் என்று சொல்கிறான். இதைக்கேட்ட அடுத்த நாள் துளசி வீட்டை காலி செய்து கொண்டு ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு வந்து நிற்க அபிராமி அவளை ஆரத்தி எடுத்து வரவேற்க மீனாட்சி துளசியின் வருகையால் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











