அஞ்சலியை முடக்க திட்டமிடும் மகேஷ்.. நடக்கப்போவது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: சிவராமன் தனது நண்பர் சண்முகத்திடம் பார்க்கிங் வரைக்கும் சென்று வரலாம் என்று சொல்கிறார். ரொம்ப நாளா வண்டி பார்க்கிங்ல இருக்கு, அதுல வண்டி சம்பந்தமான ஒரு முக்கியமான டாக்குமெண்ட் இருக்கு என்று சொல்கிறார். திடீரென மகேஷ் நோட்டமிடலாம் என்ற சந்தேகம் வருவதால், சத்யாவை அனுப்பி வண்டியை எடுத்து விடுகின்றனர். இந்த விஷயம் அறிந்த மகேஷ் கடுப்பாகிறான்.
இதையடுத்து சிவராமனின் நண்பர் சண்முகம், அப்பா கொடுத்ததாக சொல்லி அஞ்சலியிடம் அந்த எஞ்சின் சீக்ரெட் குறித்த டாக்குமெண்டை கொடுக்கிறார். அந்த அவை அம்மாவிடம் கொடுத்து அப்பா கொடுத்ததாக சண்முகம் அங்கிள் தந்ததாக சொல்கிறாள். மேலும் அந்த டாக்குமெண்ட் படி ஒரு இன்ஜினை வடிவமைக்க அது பயங்கர வேகமாக ஒர்க் ஆகிறது. இந்த விஷயத்தையும் அம்மாவிடம் சொல்லும் அஞ்சலி ஒரு இன்வெஸ்டரை பிடித்தால் பிசினஸ் வெற்றி கண்டு விடலாம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

கெட்டி மேளம்: சிவராமன் கொடுத்த ஐடியா அஞ்சலிக்கு பிடித்துப் போகிறது. இந்த ஐடியா வழக்கமாக இருக்கும் என்ஜின்களை விட அதிகமான வேகத்தை கொடுக்கும் என சொல்லும் அஞ்சலி ஒரு இன்வெஸ்டரை பார்த்து இது குறித்து பேசினால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று சொல்கிறாள். இதையடுத்து, ஒரு இன்வெஸ்டரை சந்திக்க ரெஸ்டாரண்ட் செல்கிறார் அஞ்சலி. அவளை பின் தொடர்ந்து செல்லும் மகேஷ். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, செக்யூரிட்டியை வைத்து பேசுவதை கேட்டு தெரிந்து கொள்கிறான்.
கோவப்படும் அஞ்சலி: இந்த நேரம் அஞ்சலியின் அண்ணன் ரகுவரன் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் வண்டியை தள்ளியபடி நடந்து வருகிறார். அவனைப்பார்த்த மகேஷ், நீ இங்க இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க, ஆனால்,உன் தங்கச்சி அஞ்சலி, உங்க அப்பாவின் ஐடியாவில் நல்லா சம்பாதிக்கிறாள். உனக்கும் உங்க அப்பா ஐடியாவில் பங்கு இருக்கு என சொல்ல அவனும், அஞ்சலியின் செட்டுக்கு சென்று பங்கு கேட்டு சத்தம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











