மகேஷ் இனிமேல் உயிரோடு இருக்கக்கூடாது.. அஞ்சலியை காப்பாற்ற சுப்பிரமணி போடும் பிளான்.. கெட்டி மேளம்!
சென்னை: அஞ்சலியை செக்கப்பிற்கு அழைத்து செல்லும் மகேஷ், போகும் இடம் எல்லாம், அஞ்சலி, நீ ஜூஸ் குடிக்க வேண்டும், அதைசாப்பிடு இதை சாப்பிடு அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என தொல்லை செய்ய அஞ்சலி ஆத்திரப்படுகிறாள். பின் வீட்டுக்கு வரும் அஞ்சலி, என்னால நிம்மதியாவே வாழ முடியல, இந்த மகேஷ் என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறான் இது என்ன வாழ்க்கை என வருத்தப்படுகிறாள்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் அஞ்சலிக்கு போன் செய்யும் மகேஷ், நீ மாத்திரை சாப்டியா, சாப்பாடு சாப்டியா என்று கேட்க ஆத்திரப்படும் அஞ்சலி போனை கட் செய்கிறாள். அஞ்சலி போனை வைத்துவிட்டதால், நேராக வீட்டிற்கு வரும் மகேஷ், எனக்கு குழந்தை நினைப்பாக இருந்ததால் நேராக பழங்களை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். என் மேல இருக்கும் கோவத்தில் மருந்து மாத்திரை எதையும் சாப்பிடாமல் விட்டு விடாதே, தயவுசெய்து இந்த குழந்தைக்காக எல்லாத்தையும் சாப்பிடு என்ன சொல்கிறான். இதையடுத்து, கோபப்படும் அஞ்சலி எனக்கு தூக்கம் வருகிறது தயவு செய்து நீ போ என சொல்ல மகேஷ் கிளம்பி விடுகிறான்.

கெட்டிமேளம்: மகேஷ் சென்றதும் கதறி அழும் அஞ்சலி, இவனுடன் சேர்ந்து வாழவும் முடியவில்லை, எனக்கு தினமும் பிரச்சனைகளை கொடுத்துக்கிட்டே இருக்கான். ஹாஸ்பிடலில் என் பக்கத்தில் வந்து உங்காந்துக்கிட்டு நல்லவன் போல நடிக்கிறான். நான் என்ன பாவம் செய்தேன். எதுக்காக இந்த கர்ப்பமானோன் என நினைத்து வேதனைப்படுவதாக சொல்லி கதறி அழுகிறாள். லக்ஷ்மி வருத்தப்படாதே அஞ்சலி, எல்லாத்திற்கும் சரியான நேரம் வரும். அப்போது நீ மகேசை விட்டு மொத்தமாக விலகிவிடலாம். ஆனால் இப்போது உன் வாழ்க்கையில் இருக்கும் ஒரே பிடிப்பு குழந்தை மட்டும்தான் அந்த குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள் என சொல்கிறாள்.
தவறாக நினைக்கும் சத்யா: அஞ்சலி இப்படி வருத்தப்பட்டு பேசிக்கொண்டே இருப்பதை கேட்ட சுப்பிரமணி என் மகள் அஞ்சலியை இப்படி கொடுமைப்படுத்துகிறானே மகேஷ். இவனை என்ன செய்வது என யோசித்துக் கொண்ருக்கிறார். அப்போது அங்கு வரும் சத்யா? நீ எல்லாம் பெரிய மனுஷனா... அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கலாமா? என்னைக்காவது ஒரு நாள் நீ அந்த அம்மாவிடம் நிச்சயம் அடி வாங்க போற என சொல்லிவிட்டு சுப்பிரமணியை பற்றி தவறாக புரிந்து கொள்கிறான் சத்யா. இப்படியான நிலையின் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











