மீனாட்சியின் சதியில் சிக்கும் துளசி.. நடந்தது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில், சிவராமன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மகேஷின் காரை வழி மறித்து அவனை கீழே இறங்க வைத்து மயக்கம் மருந்தைவைத்து அவனை கடத்தி விடுகின்றனர். அடுத்ததாக குடோனுக்குள் மகேஷ் கண்டுபிடிக்க சுப்ரமணி நான்தான்டா உன் மாமனாரு சிவராமன் என அதிர்ச்சி கொடுக்கிறார். நீ எப்போதும், மத்தவங்கள கடத்தி வைத்து டார்ச்சர் பண்ணுவ, உனக்கும் அதே நிலைமைதான் இப்போ.. இனிமே நீ சாகுற வரைக்கும் இப்படியே இருக்க வேண்டியது தான் என சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி, வீட்டில் மகளிர் அணி தலைவராக யாரை நிற்க வைப்பது என்ற பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில், மீனாட்சி எப்படியாவது இந்த பதவியை பெறவேண்டும் என முடிவெடுக்கிறாள். இதையடுத்து, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கெட்டிமேளம் சீரியல்: இன்றைய கெட்டிமேளம் சீரியலில், அபிராமி நம்ம வீட்டிலேயே மூணு பேர் இருக்கும்போது எதுக்கு வெளில தேடணும் என்று சொல்ல, அப்போது ஈஸ்வரமூர்த்தி, சரிதான் அபிராமி, ஆனால், மகளிர் அணி தலைவர் மக்களுக்கு பரிச்சயமானவங்களா இருக்கணும் என ஈஸ்வரமூர்த்தி சொல்கிறார். இதையடுத்து, மீனாட்சி தன்னைத் தான் சொல்வாங்க என சந்தோஷப்பட கடைசியில் துளசி பற்றி பேச கடுப்பாகிறாள். இதையடுத்து துளசிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ஃபோன் வருகிறது. அதில் பேசும் பெண், உங்களை ஏன் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க என்பதற்காக ஆதாரம் என்கிட்ட இருக்கு, நீங்க கோவிலுக்கு வந்தீங்கன்னா உங்க கிட்ட கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல துளசி கிளம்பி கோவிலுக்கு செல்கிறாள்.
மயங்கி விழுந்த துளவி: அதன்பிறகு, துளசி யாரிடமும் சொல்லாமல் கோவிலுக்கு வந்து விட்டு, போன் செய்ய, அந்த பெண், மேடம் கோவிலுக்கு வருவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. என்னை கொலை பண்ணிடுவாங்கன்னு பயமா இருக்கு, நீங்க வீட்டுக்கு வந்தா, நான் ஆதாரத்தை தருகிறேன் என அந்த பெண் சொல்ல, துளசி அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறாள். வீட்டில் அந்த பெண், துளசிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க, அந்த தண்ணீரை குடித்த துளசி அப்படியே மயங்குகிறாள். மறுபக்கம் வீட்டில், நீண்ட நேரமாக துளசியை காணவில்லை என தேடி அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இங்கே துளசி கண் விழிக்க அவள் ரூமுக்குள் அடைபட்டு கிடப்பது தெரிய வருகிறது. மேலும் பேக்கில் செல்போனைத் தேட மொபைல் இல்லை எனவும் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











