துளசியின் ஆபாச வீடியோ.. வீட்டை விட்டு வெளியேறிய அவலம்.. கெட்டிமேளம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியல் நேற்றைய எபிசோடில், துளசிக்கு ஃபோன் செய்த பெண், உங்களை கொல்லவந்தது யார் என்று எனக்கு தெரியும் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு என்று சொல்லி,துளசியை கோவிலுக்கு வர சொல்கிறார். இதையடுத்து, துளசி யாரிடமும் சொல்லாமல் கோவிலுக்கு வந்து விட்டு, போன் செய்ய, அந்த பெண், மேடம் கோவிலுக்கு வருவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. என்னை கொலை பண்ணிடுவாங்கன்னு பயமா இருக்கு, நீங்க வீட்டுக்கு வந்தா, நான் ஆதாரத்தை தருகிறேன் என அந்த பெண் சொல்ல, துளசி அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறாள்.

வீட்டில் அந்த பெண், துளசிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க, அந்த தண்ணீரை குடித்த துளசி அப்படியே மயங்குகிறாள். மறுபக்கம் வீட்டில், நீண்ட நேரமாக துளசியை காணவில்லை என தேடி அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இங்கே துளசி கண் விழிக்க அவள் ரூமுக்குள் அடைபட்டு கிடப்பது தெரிய வருகிறது. மேலும் பேக்கில் செல்போனைத் தேட மொபைல் இல்லை எனவும் தெரிய வருகிறது.

Getti melam promo
Photo Credit:

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், வீட்டில் அனைவரும் துளசியை காணவில்லை என தேடுகின்றனர். அப்போது அபிராமி, எனக்கு என்னமோ பயமா இருக்கு ஏற்கன அவளை கடத்திய கும்பல் அவளை கடத்தி இருப்பார்களோ என எனக்கு தோன்றுகிறது என சொல்கிறார். உடனே வெற்றி அப்படி எல்லாம் இருக்காதுமா, நீங்க பயப்படாம இருங்க என்று சொல்லிவிட்டு துளசியை தேடி செல்கிறார்.

தப்பித்த துளசி: மறுபக்கம், இங்கே துளசி கண் விழித்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்க, ஜன்னல் வழியாக உதவி கேட்கிறார். அப்போது, கட்சிக்காரர் ஒருவரின் குரல் கேட்க அவரின் உதவியால் அந்த வீட்டில் இருந்து துளசி தப்பிக்கிறாள்.பின் துளவி வீட்டிற்கு வர, அனைவரும் என்னாச்சு என்று கேட்க கோவிலில் நேரமாகி விட்டதாகவும் செல்போன் தொலைந்து விட்டதாகவும் சொல்கிறார். பிறகு வெற்றிக்கும் தகவல் கொடுக்க அவனும் வீட்டிற்கு வருகிறான்.

ஆபாச வீடியோ: அடுத்த நாள் காலை துளசி வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, அதை ஒரு கட்சிக்காரர் ஈஸ்வரமூர்த்திக்கு அனுப்ப அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, ஈஸ்வரமூர்த்தி, துளசி மீது கோபப்படுகிறார். ஆனால், துளசி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லியும் நம்ம மறுப்பதால், இதற்கு மேல் இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு இந்த வீட்டிற்கு வருகிறேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X