நான் உத்தமிதான்.. நிரூபித்து காட்டுகிறேன் சவால் விட்ட துளசி.. கெட்டிமேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில், துளசி வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, அதை ஒரு கட்சிக்காரர் ஈஸ்வரமூர்த்திக்கு அனுப்ப அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, ஈஸ்வரமூர்த்தி, துளசி மீது கோபப்படுகிறார். ஆனால், துளசி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லியும் அனைவரும் நம்ப மறுக்கின்றனர். இதனால், ஆத்திரப்படும் துளசி, ராமர் சந்தேகப்பட்டார் என்பதற்காக என்னால், தீக்குளிக்க முடியாது. இதற்கு மேல் இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு இந்த வீட்டிற்கு வருகிறேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இன்றைய எபிசோடில், லட்சுமி மற்றும் அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருக்க அஞ்சலி வீடியோவை பார்த்து தயங்குகிறாள். லட்சுமி என்ன ஆச்சு என்று கேட்க ஒரு கட்டத்தில் அக்காவை பற்றி தப்பான வீடியோ ஒன்று வைரல் ஆகிட்டு இருக்கு என்று சொல்கிறாள். அக்கா இப்படி செய்யக்கூடிய ஆள் கிடையாது இதில் ஏதோ தவறு நடந்து இருக்கு என, துளசிக்கு போன் போட்டு நீ வீட்டுக்கு வா அக்கா எல்லாத்தையும் பாத்துக்கலாம் என்று சொல்கிறாள்.

கெட்டி மேளம்: கோவிலுக்கு சென்றிருந்த வெற்றி மற்றும் அபிராமி இந்த வீடியோவை பார்த்து வீட்டிற்கு ஓடி வருகின்றனர். துளசி வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் அறிந்த அபிராமி இவ்வளவு நாளா அவ நம்ம கூட இருக்கா, அவள பத்தி உங்களுக்கு தெரியாதா? அவளை எப்படி வீட்டை விட்டு போக விட்டீங்க என கோபப்படுகிறாள். துளசியை தப்பாக பேசிய மீனாட்சியையும் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள். இந்த விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கு, அவ உத்தமி என்பதை இந்த ஊருக்கு நீ நிரூபித்து காட்ட வேண்டும் என வெற்றியிடம் சத்தியம் வாங்குகிறாள் அபிராமி,
இங்கே துளசி வீட்டுக்கு வர வழியில் எல்லோரும் துளசியை பார்த்து இந்த பொண்ணு தானே அந்த பொண்ணு என ஏளனமாக பேசுகின்றனர். அஞ்சலி பேசுறவங்க பேசட்டும் நீ வா அக்கா என உள்ளே அழைத்து சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











