துளசி சொன்ன வார்த்தை.. வெற்றி எடுத்த சபதம்.. கெட்டி மேளம்!
சென்னை: துளசியின் வீடியோவை பார்த்த வெற்றி மற்றும் அபிராமி வீட்டிற்கு ஓடி வருகின்றனர். துளசி வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் அறிந்த அபிராமி இவ்வளவு நாளா அவ நம்ம கூட இருக்கா, அவள பத்தி உங்களுக்கு தெரியாதா? அவளை எப்படி வீட்டை விட்டு போக விட்டீங்க என கோபப்படுகிறாள். துளசியை தப்பாக பேசிய மீனாட்சியையும் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள். இந்த விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கு, அவ உத்தமி என்பதை இந்த ஊருக்கு நீ நிரூபித்து காட்ட வேண்டும் என வெற்றியிடம் சத்தியம் வாங்குகிறாள் அபிராமி, இங்கே துளசி வீட்டுக்கு வர வழியில் எல்லோரும் துளசியை பார்த்து இந்த பொண்ணு தானே அந்த பொண்ணு என ஏளனமாக பேசுகின்றனர். அஞ்சலி பேசுறவங்க பேசட்டும் நீ வா அக்கா என உள்ளே அழைத்து சொல்கிறாள்.
கெட்டிமேளம்: இன்றைய எபிசோடில், அபிராமி துளசியை சந்தித்து நான் உன்னை பத்தி பல நேரங்களில் கோபப்பட்டு பேசியிருக்கேன். ஆனால், இந்த விஷயத்துல ஒரே உன்ன தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் நீ நெருப்பு, வா வீட்டுக்கு போகலாம் என்று அழைக்க துளசி நான் நிரபராதி என் மேல எந்த தப்பும் இல்லை என்று நிரூபிக்காமல் அந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று சொல்கிறாள். மேலும் வெற்றி வராததால் வருத்தமும் அடைகிறாள்.

என் பொண்டாட்டி நெருப்பு: இங்கே வெற்றி ரூமுக்குள் இருக்க கதிர் அவனை சந்திக்க வர என் பொண்டாட்டி இந்த மாதிரி தப்பு பண்ணி இருக்க மாட்டானு உங்க யாருக்கும் தெரியாதா? எல்லாருமே சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டிங்க என்று கோபப்படுகிறான். வெற்றியின் அப்பாவும் பாட்டியும் துளசி மேல தான் தப்பு என்பது போல பேச அங்கு வந்த அபிராமி என் மருமக நெருப்பு அவமேல எந்த தப்பும் கிடையாது என சப்போர்ட் செய்து பேசுகிறாள். வெற்றி கூடிய சீக்கிரம் ஊர் முன்னாடி என் மருமகள் மேல எந்த தப்பும் இல்ல நீ நிரூபித்து விட்டு அவள இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல வெற்றி கண்டிப்பாக நிரூபிப்பேன் என சபதம் எடுக்கிறான்.
மறுபக்கம், சத்யா குடித்துவிட்டு வர அஞ்சலி அவனை திட்டுகிறாள். சத்யா எப்படி வாழனும்னு தெரியாம இருந்த எனக்கு வாழ்க்கைனா என்னனு சொல்லி கொடுத்தது நீங்க தான்.. நீங்க என்னை நம்பாதது தான் எனக்கு வருத்தமா இருக்கு என சொல்கிறான். நானா சொல்ற வரைக்கும் என்னுடைய பிரச்சனையை பத்தி கேட்க மாட்டேன், என்ன முழுசா நம்புவேன் சத்தியம் பண்ணி கொடுங்க என்று சத்யா கேட்க அஞ்சலி சத்தியம் செய்து கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











